தோனியை கடவுளாக பார்க்கும் ரசிகர்கள் அவருக்காக இதைக் கூட செய்வார்கள்.. சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேட்டி

ஐபிஎல்லின் அடையாளமாக கருதப்படும் மகேந்திர சிங் தோனியை காண சிஎஸ்கே போட்டி நடைபெறும் ஒவ்வொரு மைதானத்திற்கும் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கும் என்று அனைவரும் கருதுவதால், சென்னை விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் தவறாமல் மைதானங்களில் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் வேளையில், சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடவுள் போன்றவர் என்றும் அவருக்காக ரசிகர்கள் இதைக் கூட செய்வார்கள் என்றும் கூறுகிறார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 5 ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்தவர். மேலும் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தையும் வென்று கொடுத்திருக்கிறார். மேலும் இரண்டு உலகக் கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்து மகிழ்ச்சியை வர வைத்தவர். இந்த அளவு சாதனைகள் வைத்துள்ள தோனியை ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியாகவே பார்க்கிறார்கள்.

- Advertisement -

இதனால் சென்னை அணி பேட்டிங் செய்யும்போது மகேந்திர சிங் தோனி களம் இறங்கினால் கொல்கத்தா வீரர் ரசலே காதை மூடிக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும். ஆனால் தோனியும் தன் ரசிகர்களுக்காகவே 42 வயதாகியும் தற்போது தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மகேந்திர சிங் டோனி ரசிகர்களுக்கு கடவுள் போன்றவர் என்றும் அவருக்காக கோவில் கூட கட்டுவார்கள் என்றும் சிஎஸ்கே முன்னாள் அம்பாதி ராயுடு கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து மகிழ்ச்சியை வர வைத்தவர். அவர் மேலும் சிஎஸ்கேவுக்காக 5 ஐபிஎல் பட்டங்களையும், மேலும் ஒரு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் பல மகத்தான சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி தற்போது அவரை சிஎஸ்கே ரசிகர்கள் கடவுளாகவே பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அவருக்காக கோயில் கூட கட்டுவதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறியிருக்கிறார். அம்பாதி ராயுடுவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:ருத்ராஜ் ஆடுனா ஓகே.. அதுவே கோலி ஆடுனா மட்டும் தப்பு.. இது என்னங்க நியாயம்.. ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அனிருதா ஸ்ரீகாந்த்

இந்திய கிரிக்கெட்டையே தன் கேப்டன்சி மூலம் கட்டி ஆண்ட இந்த நாயகனுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தான் சரியான வழி அனுப்புதல் இல்லை என்றாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு நிச்சயமாக பிரியாவிடை கொடுத்து அனுப்புவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles