நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று, ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இனி வரும் இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
அதிலும் அடுத்த போட்டி சென்னை மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும், அடுத்த போட்டி பெங்களூர் அணிக்கு எதிராகவும் களமிறங்க உள்ளது. இந்த இரண்டு அணிகளுமே தற்போது மிக வலுவாக இருப்பதால் குறிப்பிடத்தக்க இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டியது சென்னை அணிக்கு மிகவும் அவசியமாகும்.
இந்த சீசனில் ரகானே இதுவரை மிக மோசமான பேட்டிங் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இதனால் கடந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்று அனைவரும் கருதினர். இருப்பினும் இம்பேக்ட் பிளேயராக தொடக்க ஆட்டக்காரராக இறங்கினார். அதிலும் ஐந்து பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
தொடர்ந்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வரும் இவருக்கு சிஎஸ்கே எதனால் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை. மேலும் தற்போது பந்து வீச்சும் மிக பலவீனமாகவே இருக்கிறது. அந்த அணியின் முஸ்தபிக்குர் ரஹ்மான் வங்கதேசம் சென்று விட்டார். தீக்ஷானா மற்றும் பத்திரானா ஆகியோர் இலங்கை சென்று விட்டனர்.
மேலும் உள்ளூர் வீரர்களான தீபக்சாகர் காயம் காரணமாக இனிவரும் எஞ்சிய போட்டிகளில் அவரும் பங்கு பெற மாட்டார். இந்த நிலையில் பந்துவீச்சை பலப்படுத்தவும் பேட்டிங்கில் மாற்றத்தை கொண்டு வரவும் சிஎஸ்கே அணி இந்த இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதில் முதலாவது ஆக இந்த சீசனில் இன்னும் வாய்ப்பு பெறாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருப்பவர் அண்டர் 19 கிரிக்கெட்டில் தற்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ஆரவல்லி அவினாஷ். அவர் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து சென்னை அணியுடன் இருந்து வருவதால் பேட்டிங் குறித்து நிறைய அனுபவங்களை பயிற்சியாளர்களிடம் இருந்து பெற்று இருப்பார். இதனால் அவர் மிடில் வரிசையிலோ அல்லது தொடக்க ஆட்டக்காரராகவோ களம் இறக்கலாம்.
இரண்டாவதாக வேக பந்து வீச்சு பலவீனத்தை சரி செய்யும் வகையில் வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை களம் இறக்கும் விதமாக கடந்த சீசன்களில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி கொடுத்த ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ் ஹாஸில்வுட்டை மீண்டும் சென்னை அணிக்காக வாங்கலாம். இந்த இரண்டு மாற்றங்களை செய்யும்பட்சத்தில் சிஎஸ்கே அணி இந்த இரண்டிலுமே வலுவடையும்.

