பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்று என்பது சற்று சிக்கலாக இருக்கிறது. இனி ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே அடுத்தடுத்த போட்டிகள் சென்னை அணிக்கு இருப்பதால் இந்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் சென்னை அணிகிறது.
பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து ஸ்டீபன் பிளமிங் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார் மற்றும் தோல்விக்கான முக்கிய காரணத்தையும் விளக்கி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் கில் மற்றும் சாய் சுதர்சன் இவர்கள் இருவரின் அற்புதமான பேட்டிங்கால் குஜராத் அணி 231 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 103 ரன்களும், கில் 104 ரன்கள் குவித்தனர். இந்தப் பாட்னர்ஷிப்புக்கு முக்கிய காரணம் சென்னை அணி சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதே ஆகும். மேலும் பீல்டிங்கிலும் கோட்டை விட்டது.
இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தொடக்கம் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. ரகானே, ரச்சின் ரவீந்திரா மற்றும் ருத்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்த ஆட்டம் இழந்ததால் சென்னை அணி 10 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதற்குப் பின்னர் மிச்சல் மற்றும் மொயின் அலி கூட்டணி ஓரளவு சென்னை அணிக்கு சாதகமாக ரன்களை கொண்டு வந்தாலும், இறுதியில் அவர்களால் வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதனால் இறுதியில் சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் எங்கள் அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத ஒரு கை உடைந்தது போல் இருக்கிறது என்று கூறுகிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது
“பிளான் ஏ ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், பிளான் பி மற்றும் சி க்கு செல்ல வேண்டும். இனி நாங்கள் பிளான் டி ஐயும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் உயர்மட்ட கிரிக்கெட்டை ஆடி சென்று இருக்கிறார்கள். முதல் ஓவரில் இருந்தே அவர்களது ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆடுகளம் கொஞ்சம் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க:தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கு விளையாடினாலும் மரியாதை கிடைக்கும்.. வெற்றிக்குப் பின்னர் ரஷீத் கான் பேட்டி
ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி ஒத்துழைக்கவில்லை. மேலும் எங்கள் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது ஒரு கை உடைந்தது போல் இருந்தது. மேலும் இன்றைய போட்டியில் பந்து வீசியவர்களும் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியவர்கள்தான். எங்களது பீல்டிங் இன்றைய போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. மேலும் சில கேட்ச் வாய்ப்புகளையும் தவற விட்டோம். நாங்கள் பேட்டிங்கில் சற்று ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் எங்களால் கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்தப் போட்டியில் சாய் சுதர்ஷன் பேட்டிங் பார்ப்பதற்கு அபாரமாக இருந்தது. அவர் கடந்த சீசன் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். எனவே நாங்கள் செய்த தவறுகளை சரி செய்து விட்டு அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்” என்று கூறி இருக்கிறார்.

