டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உள்ள பிட்சுகளில் மைதானம் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்பதால் டி20 கிரிக்கெட்டில் மெதுவாக ஆடும் விராட் கோலி நீக்க வேண்டும் என்று தேர்வுக்குழு தரப்பில் கலந்தாலோசித்ததாக செய்திகள் வெளியான நிலையில் அதனை எதிர்த்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக நின்றனர்.
அதுபோல விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக ஆரம்பித்துவிட்டு இடையில் மந்தமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். ஆனால் கடந்த சில போட்டிகளாக விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூட 92 ரன்கள் விலாசி 195 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த மைதானத்திலும் சிறப்பாக செயல்படும் விராட் கோலி டி 20 உலக கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும். அப்படி கிளம் இறங்கினால் அவர் 40 பந்துகளில் 100 ரன்கள் கூட அடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியிருந்தார். அவர் கூறியதைப் போலவே நேற்றைய போட்டியில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி மிகவும் அபாரமாக விளையாடினார்.
விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது குறித்து பேசிய கங்குலி
“விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் கூட 90 ரன்கள் சிறப்பாக அடித்தார். நீங்கள் வருகிற உலக கோப்பையில் விராட் கோலியை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அவர் ஓபனிங் களமிறங்கி விளையாட வேண்டும். அதற்கு கடந்த சில ஐபிஎல் போட்டிகளே நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த டி20 உலக கோப்பைக்கு நாம் மிகவும் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சு துறையும் மிக வலுவாகவே விளங்குகிறது. இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் 200 முதல் 250 ரன்கள் வரை அடிப்பதை பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம் இந்தியாவிலுள்ள பிட்ச் சூழ்நிலையும், சிறிய மைதானங்களும் தான்.
இதையும் படிங்க:தான் நல்லா இருக்கணும்னா ஊரே நாசமா போகணும்.. ஆர்சிபி நிலைமையும் அப்படித்தான்.. சடகோபன் ரமேஷ் கலகல பேச்சு
இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் அனைத்து அணிகளும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் உடன் களமிறங்குவதால் இந்த சூழ்நிலை மாறியுள்ளது. இந்த சூழ்நிலையிலும் அசத்தக்கூடிய பந்துவீச்சாளர்களாக பும்ரா, குல்தீப் மற்றும் அக்சர் இருக்கின்றனர்” என்று கூறி இருக்கிறார். அதாவது விதிமுறைகளையே குறை கூறாமல் அதில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கங்குலி கூறி இருக்கிறார்.

