மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு ரோஹித் சர்மா மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்று தோன்றுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை விடுவித்து ஹர்திக் பாண்டியாவை நியமித்தது நம் அனைவருக்குமே தெரியும். தற்போது மும்பை அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதையும் நாம் அறிவோம். இந்த நிலையில் கொல்கத்தா அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணியின் சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.
அந்தப் போட்டிக்குப் பிறகு மும்பை வீரர் ரோகித் சர்மா உடன் கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். மேலும் கொல்கத்தா அணி நிர்வாகிகளும் ரோகித் சர்மாவுடன் நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் மும்பை அணியும் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி உள்ளதால் அவருக்கும், அம்பானி குடும்பத்திற்கும் சிறிய மன வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அடுத்த வருடம் மெகா ஆக்சன் நடத்தப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு அணி நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள மட்டுமே அனுமதி உண்டு. மேலும் இரு வீரரை ஆர்டிஎம் முறையில் எடுத்துக் கொள்ளலாம். தக்கவைக்கப்படும் வீரர்களில் ஹர்திக் பாண்டியா, பும்ரா சூரியகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் இருப்பார்கள். இதில் ஆர்டிஎம் கார்டு முறையில் திலக் வர்மா, ரோஹித் சர்மா, இசான் கிசான் ஆகிய மூன்று வீரர்களின் இரு வீரர்களை மட்டுமே எடுக்க முடியும் என்பதால் ரோஹித் சர்மாவை திரும்ப வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே பார்க்கப்படுகிறது.
எனவே ரோகித் சர்மாவை வேறு அணி வாங்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாஸிம் அக்கரம் கூறும் பொழுது
“அடுத்த சீசனில் ரோகித் சர்மா மும்பை அணியுடன் விளையாட மாட்டார் என்று தோன்றுகிறது. அவர் கேகேஆர் அணியில் இணைந்து விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை.
கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். கொல்கத்தா அணியில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரர். கௌதம் கம்பீர் ஆலோசகர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன். இவர்கள் மூன்று பேர் காம்பினேஷனில் கொல்கத்தா அணி வேறு மாதிரி இருக்கும். எனவே ரோகித் சர்மா கொல்கத்தா அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்காததை நினைச்சா எரிச்சலா இருக்கு.. மனம் திறக்கும் மிட்சல் சான்ட்னர்
இவரது கருத்து இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரோகித் சர்மாவை வாங்க பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் போட்டி போட்டு வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் கொல்கத்தா அணியும் இணைந்துள்ளதாக கருதப்படுகிறது.

