நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளில் வெற்றியும், ஐந்து போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து அணியைச் சேர்ந்த டாரி மிச்சல் பயிற்சியின்போது ரசிகர் ஒருவரின் ஐபோனை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு டாரி மிச்சல் செய்த செயலை தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் காயம் காரணமாக முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் மூவர் விலகி உள்ளனர். தீபக்சகர் காயம் காரணமாக விலகி இருக்கிறார். மேலும் இலங்கை அணியின் வேகப்பந்து பேச்சாளர்களான பத்திரானா மற்றும் தீக்ஷானா ஆகியோரும் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிகுர் ரஹ்மான் ஆகியோரும் அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இவர்கள் மூவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணையில் பிளேயிங் லெவனில் விளையாடக்கூடியவர்கள் என்பதால் தற்போது பந்து வீச்சு சிஎஸ்கே அணிக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனவே இனிவரும் மூன்று போட்டிகளில் கட்டாயம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி செல்ல முடியும். இந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு அமையும்.
இந்த நிலையில் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக சிஎஸ்கே அணி வீரர்கள் மைதானங்களில் பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. இதே போல சிஎஸ்கே அணிக்காக தற்போது விளையாடி வரும் நியூசிலாந்து அணியை சேர்ந்த டாரி மிச்சல் மைதானத்தின் அருகே பயிற்சியை மேற்கொண்டு இருந்தார். அப்போது ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்தபடி மிச்சலை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பயிற்சியின் போது மிச்சல் அடித்த பந்து வலையைத் தாண்டி மைதானத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் மீதும் அவர் வைத்திருந்த ஐபோன் மீதும் பந்து தாக்கியது. இதை டாரி மிச்சல் அப்போதே பார்த்து விட்டார். இதனை அறிந்த அவர் உடனே அந்த ரசிகரை சந்தித்து காயம் குறித்து விவாதித்து விட்டு அவருக்கு இரண்டு கையுறைகளையும் பரிசாக வழங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க:டி20 உலக கோப்பையில் இடம் பெறுவது என் கையில் இல்லை.. ஆனால் இப்போது எனது ஒரே குறிக்கோள் இது மட்டுமே.. நடராஜன் ஓபன் டாக்
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டாரி மிச்சல் செய்த இந்த நிகழ்ச்சி செயலை தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
A guy got hurt and broke his iPhone during practice!!!
— AnishCSK💛 (@TheAnishh) May 7, 2024
Daz gave him his Gloves as a reward!!!💛👊🏻⭐️😎 pic.twitter.com/NkfAGp8Zph

