டி20 உலக கோப்பையில் இடம் பெறுவது என் கையில் இல்லை.. ஆனால் இப்போது எனது ஒரே குறிக்கோள் இது மட்டுமே.. நடராஜன் ஓபன் டாக்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதில் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பெயர் உலக கோப்பையில் இடம் பெறும் என்று அனைவரும் கருதினர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது பெயர் டி20 உலக கோப்பை இடம் பெறவில்லை. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இடம் பெறாதது குறித்து நடராஜன் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியைப் பொறுத்தவரை எப்போதுமே காலம் காலமாக பேட்டிங்கில் மிக வலுவாக சிறந்து விளங்கும் அணி. ஆனால் பெரிய சறுக்கலே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுதான். 2010 காலகட்டத்தில் இந்திய அணிக்கு எப்படி ஜாகிர் கான் சிறந்து விளங்கினாரோ, அதேபோல தற்போது பும்ரா இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

- Advertisement -

அவருக்கு பாட்னர்ஷிப் அளிக்கும் விதமாக முகமது சமி மற்றும் சிராஜ் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். இந்த நிலையில் முகமது சமி காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விடுபட, முகமது சிராஜ் மட்டுமே தற்போது பும்ராவுடன் கைகோர்த்து இருக்கிறார். ஆனால் அவரும் தற்போது ஐபிஎல்லில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீதும் இந்திய ரசிகர்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை.

தற்போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக வீரன் நடராஜன் உலகக்கோப்பை டி20 இந்திய அணியில் விளையாடுவார் என்று அனைவருமே நம்பினர். ஏனெனில் அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சில் துல்லியமும், வேரியேஷன்களும் இருந்தது. ஆனால் அதனை ஏமாற்றும் விதமாக நடராஜனின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுனர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

- Advertisement -

எனவே இந்த நிலையில் உலகக்கோப்பையில் இடம் பெறாதது குறித்து முதன்முறையாக மனம் திறந்த நடராஜன் கூறும்பொழுது
“உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது என்பது என் கையில் இல்லை. உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யும் வீரர்களின் பட்டியலில் என் பெயர் இருந்ததே மிகப்பெரிய விஷயம். இப்போது எனது ஒரே குறிக்கோள் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இன்னும் பல வெற்றிகளை தேடி தருவது மட்டுமே.

இதையும் படிங்க:சில விஷயங்களை மகேந்திர சிங் தோனியால் கூட சொல்லித் தர முடியாது.. மனம் திறக்கும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா

அது மட்டுமே தற்போது எனது முக்கிய நோக்கமாக உள்ளது. உலக கோப்பை அணியில் இடம்பெறாதது என்னை பெரிதாக பாதிப்படையச் செய்யவில்லை. நமக்கு என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதுவே நடக்கும் என்று நான் எப்போதும் நம்புவேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles