நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும் பொழுது ஒரு சில விஷயங்களை மகேந்திர சிங் தோனியால் கூட கற்றுத் தர முடியாது என்று கூறி இருக்கிறார்.
மும்பை அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரண்களும், கேப்டன் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ரன்கள் குவித்தனர்.
மும்பை அணித்தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விரைவாக மூன்று விக்கெட்டுகள் 31 ரன்களுக்குள் இழந்தது. அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சரிவில் இருந்த மும்பை அணியை மீட்டனர்.
அபாரமாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா 32 பந்துகளில் 37 ரன்கள் குவித்து மும்பை அணியை இவர்கள் இருவரும் வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா
தோல்வியில் இருந்து கிடைக்கும் அனுபவத்தை யாரும் சொல்லித் தர முடியாது. அதை நாமே அனுபவித்தால்தான் அந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கான வழியை கண்டறிவோம்.
அது நமக்கு நெருக்கமானவர்களோ, நமது ஆஸ்தான நாயகரான மகேந்திர சிங் தோனி கூட இதை ஓரளவுக்கு மேல் நமக்கு சொல்லித் தர முடியாது. இதை நாமே பட்டு தெரிந்துதான் ஆக வேண்டும். மேலும் எங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும். இப்போதைக்கு அது பற்றி எதுவும் கூற முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இவர் எங்கள் அணியில் இருப்பது அதிர்ஷ்டம்.. எந்த நேரத்திலும் இவரால் ஆட்டத்தை மாற்ற முடியும்.. வெற்றிக்கு பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியா
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. குஜராத் அணி தற்போது பத்தாவது இடத்திற்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளையும் மும்பை அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு பெரிய ஆறுதலாக இருக்கும் என்று சந்தேகம் இல்லை.

