வருத்தப்பட வேண்டாம் ரிங்கு சிங்.. உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.. ஆறுதல் வார்த்தைகள் கூறும் முன்னாள் பிசிசிஐ தலைவர்

வருகிற ஜூன் மாதம் டி20 உலக கோப்பை அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அது சில சர்ச்சைகளையும் கிளப்பியது.

- Advertisement -

அதில் முக்கியமாக இந்திய அணிக்கு சமீபகாலமாக பினிஷிங் ரோலில் சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங் டி20 உலக கோப்பை அணியில் சேர்க்காது சர்ச்சையானது. இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட்டரும் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி ரிங்கு சிங் சேர்க்கப்படாதது குறித்தும் இந்திய அணி தேர்ந்தெடுத்துள்ள உலகக் கோப்பை அணி குறித்தும் முக்கிய கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இந்திய தேர்வு குழு வாரியம் டி20 உலக கோப்பை அணியை அறிவித்தது. அதில் முக்கியமாக அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது குறித்து பல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

இந்திய அணி கிரிக்கெட்டரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் இது ஒரு குப்பையான தேர்வு என்றும் இதில் தனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை என்றும் தனது காட்டமான விமர்சனத்தை தெரிவித்து இருந்தார். மேலும் இது குறித்து நேற்று முன் தினம் விளக்கம் அளித்த இந்திய அணி நிர்வாகம் ரிங்கு சிங்கின் மீது எந்த தவறும் இல்லை என்றும் காம்பினேஷனில் அவர் செட்டாகாததால்தான் தேர்வு செய்யவில்லை என்றும் கூறியிருந்தனர்.

மேலும் உலக கோப்பைக்கு நான்கு ஸ்பின்னர்கள் தேர்வு செய்தது குறித்து உலக கோப்பையில் அதற்கான முழு விளக்கமும் தெரியவரும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார். இது குறித்த முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறும் பொழுது
“ரிங்கு சிங் இந்திய டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்த வருத்தமும் கொள்ளத் தேவையில்லை. போட்டி நடைபெறுவது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெறுகிறது.

- Advertisement -

அதனால் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாலே இந்திய தேர்வு குழு கூடுதலாக ஒரு ஸ்பின்னர் உடன் செல்ல தீர்மானித்திருக்கிறது. இதன் காரணமாகவே ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாமல் இருக்கலாம். இது ஒரு தொடக்கம்தான். இது குறித்து மனம் தளர தேவையில்லை. வரும் காலங்களில் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு அவர் மிகப்பெரிய இடத்தை பிடிக்க முடியும்.

இதையும் படிங்க:மகேந்திர சிங் தோனி என் தந்தைக்கு நிகரானவர்.. எனக்காக அவர் இன்னும் ஒரு சீசன் விளையாட வேண்டும்.. உணர்ச்சிமிகு கருத்துக்களை கூறியிருக்கும் பத்திரானா

இந்தத் தேர்வு குறித்து அவர் எதுவும் நினைக்காமல் வழக்கம் போல தனது பயிற்சியை தொடங்க வேண்டும். தற்போது தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியை பொறுத்தவரையில் அனைவருமே மேட்ச் வின்னர்கள்தான். எனவே தற்போது தேர்வு செய்யப்பட்ட அணி சிறந்த அணி என்று கருதுகிறேன். ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் ஆகியோர் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles