சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்திருக்கிறது. மேலும் வெற்றி பெற்ற பிறகு பஞ்சாப் திங்ஸ் சமூக வலைதளத்தில் இட்ட பதிவு சிஎஸ்கே ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
சென்னையின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. பவர் பிளேவரை ஓவருக்கு 10 ரன்கள் என்று நல்ல நிலையில் வந்து கொண்டிருந்த சென்னை அணிக்கு அதன் பிறகு பஞ்சாப் அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் சென்னை அணியின் ரன் வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தினர்.
ரகானே 29 ரன்களும் அதற்கு பின்னர் வந்த சிவம் டுபே டக் அவுட் ஆகியும் வெளியேற, அதற்குப் பிறகு களமிறங்கிய சமீர் ரிஸ்வி பந்துகளை வீணடித்து மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளில் 21 ரன்கள் குறித்து அவர் ஆட்டம் இருந்து வெளியேற, கேப்டன் ருத்ராஜ் மட்டும் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 162 ரன்கள் குவித்தது.
இதற்கு பிறகு வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் அணி சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ 46 ரன்களும், ரூசோ 43 ரன்களும் விளாசினர். பின்னர் சசாங்க் சிங் 25 ரன்களும், சாம்கரன் 26 ரன்களும் குவிக்க, பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 163 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற பின், பஞ்சாப் அணி தனது சமூக வலைதளத்தில் மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதி மற்றும் விஜய் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி சென்னை அணியுடன் போட்டியை குறிப்பிட்டு ‘அலப்பறை கிளப்புறோம்’ என்று பதிவிட்டு இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பின்னர் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின் மாஸ்டர் படத்தில் விஜய் பேசும் ஒரு வசனமான “என்ன புடிச்சிவன் கோடி பேர் இருக்கான்டா வெளியில” என்று கூறுவது போல வரும் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐந்தாவது வெற்றி குறித்து அதனை பதிவிட்டு இருந்தது. அதாவது சிஎஸ்கே அணி போல எங்களுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதைச் சொல்லும் விதமாகவே இந்த பதிவு அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க:சிஎஸ்கே ஆமை வேக ஆட்டம்.. தொடர்ந்து 5வது முறையாக பஞ்சாப் அணியிடம் தோல்வி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்ட இந்த பதிவு தற்போது சிஎஸ்கே ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது. பத்து போட்டியில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு தற்போது ஐந்தாவது தோல்வியாக அமைந்திருக்கிறது. இருப்பினும் புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
5⃣th consecutive win against CSK! ❤️🔥#CSKvPBKS https://t.co/yz77oOlLCS pic.twitter.com/gif6BklpEW
— Punjab Kings (@PunjabKingsIPL) May 1, 2024

