அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை காண இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இந்திய அணியில் தவறு இருப்பதாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஆரோன் பிஞ்ச் கூறியிருக்கிறார்.
ஐசிசி தொடர்களில் முக்கிய தொடராக கருதப்படும் டி 20 உலக கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமை தாங்கும் இந்த இந்திய அணிக்கு விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
ஜெய்ஸ்வால், பண்ட், சிவம் துபே போன்ற இந்திய இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜன் தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இளம்வீரர் ரிங்குசிங் ரிசர்வ் பட்டியலில் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பது பல முன்னால் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ரிங்கு சிங் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு விளையாடியவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து சிக்ஸர்களை விளாசி ஒரு போட்டியையே வென்று கொடுப்பார்.
அதற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு பெற்று கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விளையாடிய இவரை உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக ஆரோன் பின்ச் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“இந்தியா 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நானாக இருந்திருந்தால் ரிங்கு உடன் அங்கு இரண்டு ஸ்பின்னர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பேன்.
எனது ஆரம்ப கட்ட தேர்வில் ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்திருப்பேன். ஏனென்றால் பும்ராவை தவிர பவர் பிளேவில் அசத்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இல்லை. இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களை வைத்து விளையாட விரும்பினால் பவர் பிளேவில் ஒருவர் பந்து வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு ஸ்பின்னர்கள் அதை தொடர்ச்சியாக செய்வதாகவும் எனக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க:என்னை அவருடன் ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனமானது.. எங்கள் இருவரின் பாணியும் வேறு வேறு.. கூறுகிறார் சிஎஸ்கேவின் ஆறுச்சாமி சிவம் தூபே
எனவே இந்திய அணி தங்களுக்கு தாங்களே ஆதரவு கொடுத்துக் கொள்கிறார்கள் கூட எனக்கு தோன்றுகிறது” என்று கூறியிருக்கிறார். பிஞ்ச் கூறியதைக் கேட்டு ரசிகர்கள் தற்போது இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.

