முடிஞ்சா அடிச்சுக்கோ.. பேட்ஸ்மேன்க்கு சவால் விடுறேன்.. பவர் பிளேவில் இதான் என்னோட திட்டமா இருந்தது.. வெற்றிக்கு பின்னர் துஷார் தேஷ் பாண்டே பேட்டி

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர் துஷார்தேஷ் பாண்டே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டாசை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் தொடங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ருத்ராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள், டாரி மிச்சல் 32 பந்துகளில் 52 ரன்கள், சிவம் டுபே 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது. இதன்பிறகு வெற்றியி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. பவர் பிளேவிற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி அதன் பிறகு மீண்டு வர முடியவில்லை.

- Advertisement -

ட்ராவிஸ் ஹெட் 13 ரன்களிலும், அபிஷேக் சர்மா 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பிறகு ஹைதராபாத் அணி சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் 20 ரன்களிலும், மார்க்ரம் 26 பந்துகளில் 32 ரன்களும் குவித்தனர். இதனால் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் சிஎஸ்கே 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய சிஎஸ்கே அணியின் துஷார் தேஷ் பாண்டே கூறும் பொழுது
“பவர் பிளேவில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பொறுமையாக எங்களது திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் இலக்காக இருந்தது. அதற்கு இப்போது பலனும் கிடைத்துள்ளது. பவர் பிளேவில் ஆடுகளத்தின் நீளத்தை பயன்படுத்தி பந்து வீசுவது மிகவும் முக்கியமானது.

- Advertisement -

நான் ஒரு லென்த்தில் பந்துவீசி அதில் ரன்கள் சென்றாலும் மீண்டும் அதே லென்த்தில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை அடிக்க வைக்க சவால் விடுகிறேன். அது இன்று எனக்கு நன்றாக வேலை செய்தது. மேலும் இன்று ஆடுகளம் ஈரப்பதமாக காணப்பட்டது. அதனைப் பயன்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினேன். எனவே இந்த ஆடுகளத்தை நன்றாக பயன்படுத்தினோம் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க:3வது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே.. துஷார் தேஷ் பாண்டேவின் வேகத்தில் சரிந்த சன்ரைசர்ஸ்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எங்களிடம் ஒரு குறிப்பிட்ட திட்டம் இருந்தது. அவர்கள் ஒரு நல்ல பந்தை அடித்தாலும் எங்கள் திட்டங்களில் மட்டும் கவனத்தை செலுத்தினோம். திட்டத்தை மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles