523 ரன்கள்.. 42 சிக்ஸ்.. உடைந்த 9 மெகா சாதனைகள்.. பஞ்சாப் கொல்கத்தா வேர்ல்ட் ரெக்கார்ட்.. முழு பட்டியல்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்த்து மொத்தமாக 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள நிலையில் பஞ்சாப் அணி 8 பந்துகளை மீதும் வைத்து கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியின் மூலம் நிறைய சாதனைகள் தகர்த்தெறியப்பட்டிருக்கின்றன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி பேர்ஸ்டோவின் அபார சதத்தின் மூலம் இரண்டு விக்கெட் இழப்புக்கு எட்டு பந்துகள் மீதம் இருக்கையில் 262 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

பஞ்சாப் அணி சேசிங் செய்த 262 ரன்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி சேசிங் செய்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செஞ்சுரியனில் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி மேற்கத்திய தீவுகள் அணிக்கு எதிராக 258 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சேசிங்காக அமைந்துள்ளது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் வரலாற்றில் பஞ்சாப் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 262 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்னதாக பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 262 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையேயான போட்டியில் மொத்தமாக இரண்டு அணிகளும் சேர்த்து 42 சிக்சர்களை அடித்துள்ளது. இதுவே ஒரு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாக பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. மேலும் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டது.

- Advertisement -

பஞ்சாப் அணி நேற்றைய போட்டியில் 24 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்ஸராக பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் இதே ஆண்டில் சன்ரைசர்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 22 சிக்சர்கள் அடித்தது.

இதையும் படிங்க:எங்க தப்பு நடந்துச்சுன்னு தெரியல.. இனி தெளிவான திட்டத்துடன்தான் களமிறங்க வேண்டும்.. தோல்விக்குப் பிறகு கேகேஆர் கேப்டன் பேட்டி

மேலும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் சேர்த்து 523 ரன்கள் குவித்துள்ளது. முன்னதாக சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் 523 ரன்கள் குவிக்கப்பட்டது. முதலிடத்தில் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் சேர்த்து 549 ரன்கள் குவித்துள்ளது.

டி20 தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்தது இது ஏழாவது முறையாகும். 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு முறை 500 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

டேவிட் மில்லர் 2013ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும், 2011ஆம் ஆண்டு பால் வல்த்தாட்டி சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலும், ஜெயவர்த்தனே 2010ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் சேசிங்கில் சதம் அடித்த வீரர்கள் ஆவர். தற்போது அந்தப் பட்டியலில் நான்காவது ஆக பேர்ஸ்டோவும் இணைந்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிக்காக ஜானி பேர்ஸ்டோ மயங்க் அகர்வாலுக்கு இணையாக இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். 2013ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனை இரண்டு முறை முறியடிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சென்னை அணி இதே மைதானத்தில் 235 ரன்கள் குவித்தது. அதன் பிறகு நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 261 ரன்னும் அதனை சேஸ் செய்த பஞ்சாப் அணி 262 ரன்கள் குறித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles