ஆர்சிபிக்கு இன்னமும் இருக்கும் பிளே ஆப் வாய்ப்பு.. ஆனால் இவை எல்லாம் நடக்க வேண்டும்.. முழு விபரம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சு கவலைக்குரிய நிலைமையில் இருப்பதால் பலமான சன்ரைசர்ஸ் அணியை எப்படி சமாளிக்க போகிறது என்பதை பார்க்க ரசிகர்களிடையே ஆர்வமாக உள்ளது.

- Advertisement -

ஆர்சிபி அணியை பொறுத்தவரை தற்போது நடைபெற்ற 8 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது பள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 புள்ளிகளில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி இன்னும் ஆறு போட்டியில் மட்டுமே விளையாட முடியும்.

- Advertisement -

இந்த ஆறு போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா என்பதை காண முடியும். ஆனால் ஆர்சிபி அணிக்கு புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்னும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதற்கு முதலில் ஆர்சிபி அணி எஞ்சிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

இனி விளையாட உள்ள ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை பெறுவார்கள். இந்த சூழ்நிலையில் ஆர்சிபிக்கு மேலே உள்ள மூன்று அணிகளின் உதவி கண்டிப்பாக தேவை. முதல் மூன்று இடங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எஞ்சியுள்ள ஏழு போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் அவர்கள் முறையே 22, 20, 20 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடத்தில் இருப்பார்கள். இதனால் ஆர்சிபி அணியை 14 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

- Advertisement -

பெங்களூர் அணி நினைத்தால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை கூட பிடிக்க முடியும். அதற்கு கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணியினர் வருகிற ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகள் தோற்க வேண்டும். இதன் மூலம் இரண்டு அணிகளும் தலா 12 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். மேலும் லக்னோ அணி ஆறு போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்றால் 20 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

இதையும் படிங்க:புது ரூல்ஸ்னால 200 ரன் ஈசியா அடிக்கிறாங்க.. கடைசி 12 பந்தில் நாங்கள் செய்த தவறு.. தோல்விக்கு பின்னர் பேசிய குஜராத் கேப்டன் கில்

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணி 14 புள்ளிகள் பெறும். மற்ற அனைத்து அணிகளும் 12 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும். எனவே இவை அத்தனையும் நிகழ்ந்தால் மட்டுமே பெங்களூர் அணியால் பிளே ஆப் சுற்றி குறித்து நினைத்துப் பார்க்க முடியும். முதலில் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles