புது ரூல்ஸ்னால 200 ரன் ஈசியா அடிக்கிறாங்க.. கடைசி 12 பந்தில் நாங்கள் செய்த தவறு.. தோல்விக்கு பின்னர் பேசிய குஜராத் கேப்டன் கில்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிக்கு அருகே வந்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கோட்டை விட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் செய்த தவறுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று குஜராத் அணியின் கேப்டன் கில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. அக்சார் பட்டேல் 43 பந்தில் 66 ரன்கள், ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள், ஸ்டெப்ஸ் ஏழு பந்தில் 23 ரன்கள் என குவித்து டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மோகித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி தொடக்க ஆட்டக்காரர் சகா 25 பந்தில் 39 ரன்களும், சாய் சுதர்சன் 39 பந்துகளில் 65 ரன்கள், டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த நிலையில், கடைசி இரண்டு ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட, கடைசி வரை போராடிய ரசீத் கான் 21 ரன்கள் குவித்த நிலையில் கடைசி கட்டத்தில் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 9 போட்டிகளில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. குஜராத் அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாக அமைந்திருக்கிறது. கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் செய்த தவறுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று குஜராத் அணியின் கேப்டன் கில் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கில் மேலும் கூறும்பொழுது
“ஆட்டத்தில் தோல்வி அடைந்தது ஏமாற்றமாகத்தான் உள்ளது. ஆனால் எங்கள் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது போர் குணத்தை வெளிப்படுத்தினார்கள். 224 ரன்கள் சேசிங் செய்ய வேண்டும் என்று இருந்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

- Advertisement -

ஒவ்வொரு அணியும் இந்த விதியை பயன்படுத்தி கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் மூலம் 200 ரன்களுக்கு மேல் குவித்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் நாங்கள் டெல்லி அணியை 210 ரன்களில் முடக்குவோம் என்று நினைத்தோம். ஆனால் கடைசி இரு ஓவர்களில் பந்து வீச்சில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தோம். இது சிறிய மைதானம் என்பதால் ரன்கள் அதிகமாக சென்று விட்டது. இந்த இலக்கு நிச்சயம் சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் எங்களது பந்து வீச்சில் நாங்கள் சரியான திட்டத்தை செயல்படுத்தவில்லை.

இதையும் படிங்க:நான் எனது உள்ளுணர்வை அதிகம் நம்புவேன்.. 3 விக்கெட்டுகளை இழந்த போது நானும், அக்சரும் இதைத்தான் செய்ய நினைத்தோம்.. வெற்றிக்குப் பின் பண்ட் பேட்டி

ஆடுகளத்தில் ஏதுமில்லை என்றால் சரியான திட்டங்களுடன் களமிறங்க வேண்டியது அவசியம். பந்துவீச்சாளர்கள் தங்களது யார்க்கர்களை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles