இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடர் முடிந்தவுடன் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்காக அனைத்து அணிகளும் வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படும் வீரர்களை பொறுத்து இந்திய அணியை தேர்வு செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக இந்திய இளம் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் என கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான அணியை தேர்வு செய்து வருகின்றனர். இதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் டி20 உலக கோப்பை காண 15 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை தேர்வு செய்துள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் கேப்டன் ஆன சஞ்சு சாம்சனை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜையும், லக்னோ அணியின் கேப்டன் ஆன கே எல் ராகுலையும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, குல்தித் யாதவ் மற்றும் சகால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து கூட்டணியைப் பொறுத்தவரை பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர் தேர்வு செய்துள்ள டி20 அணியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர். ருத்ராஜ் சென்னை அணிக்காக முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாட நிலையில், அதற்கு பின்னர் வந்த போட்டிகளில் அபாரமாக விளையாடியும் அது மட்டும் இல்லாமல் கடந்த போட்டியில் சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சொல்றதுக்கே வெட்கமா இருக்கு.. எங்களால இதை கூட செய்ய முடியல.. தோல்விக்கு பின்னர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி
இர்பான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய உலகக் கோப்பை காண டி20 அணி பின்வருமாறு
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குலதீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷதீப் சிங், ஸுப்மேன் கில்.

