ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதிய ஆட்டத்தில் லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற மார்க்கஸ் ஸ்டாய்னிஷ் வெற்றி பெற்றது குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே டாஸ் வெல்லும் கேப்டனுக்கே போட்டி சாதகமாக முடிய அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தனர்.இதன்படி லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்ற பிறகு சற்றும் யோசிக்காமல் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஏனெனில் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்து இருந்தது. அந்த அணியின் ஆல் ரவுண்டர் சிவம் தூபே 27 பந்துகளில் 66 ரன்களும், அணியின் கேப்டன் ருத்ராஜ் 60 பந்துகளில் 108 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணியில் ஆல் ரவுண்டர் ஸ்டானிஷ் அபாரமாக நிலைத்து நின்று விளையாடினார். 63 பந்துகளை எதிர் கொண்ட இவர் 13 பவுண்டரிகளையும், ஆறு சிக்ஸர்களையும் விளாசி 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
சென்னை அணியின் சில ஃபீல்டிங் தவறுகளும் இப்போட்டியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்டாய்னிஷ் போட்டியில் வென்றது குறித்து கூறிய போது
“இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரை சிறந்த பேட்ஸ்மேன்கள் என்னை விட நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே அவர்களிடம் இதை விட்டு விடுகிறேன். மேலும் சென்னை அணியின் சில பந்துவீச்சாளர்களை குறி வைக்க விரும்பினோம். யாரை அடிக்க வேண்டும் யாரை விட வேண்டும் என்பதில் தெளிவாக திட்டம் வைத்திருந்தோம்.
இந்த போட்டியில் ஒரு தருணத்தில் எங்களால் பௌண்டரி அடிக்க முடியாத நிலை இருந்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய பூரானால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று நம்பினோம். அவரும் அதற்குப் பிறகு களம் இறங்கி சிறப்பாக தனது வேலையை செய்து முடித்தார். போட்டியின் சில ஏற்றத்தாழ்வுகளை நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினேன். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது.
இதையும் படிங்க:சிவம் தூபே முன்னாடியே இறங்காததற்கு காரணம் இதுதான்.. எங்க தோல்விக்கும் இதுதான் முக்கிய காரணம்.. சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் பேட்டி
எங்கள் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரோடு நல்ல புரிதல் உள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணியின் சம்பளப் பட்டியல் எனக்கு கிடைக்கவில்லை ஆனால் இது எனக்கு இவ்வாறு நடக்கும் என்று முன்பே தெரியும். இளம் வீரர்கள் என்னுடைய இடத்திற்கு வந்து நிரூபிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி இருக்கிறார்.

