சேப்பாக்கத்தில் ஆர்ப்பரித்த ஆறுச்சாமி.. கேப்டன் ருத்ராஜ் தரமான கிளாஸ் ஆட்டம்.. பௌண்டரியுடன் முடித்த தல தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் நான்கு விக்கட் இழப்புக்கு 210 ரன்களை குவித்து இருக்கிறது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியின் மூலமாக சிஎஸ்கேவின் கேப்டன் ருத்ராஜ் ஏழாவது முறையாக டாசை இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ருத்ராஜ் ஆகியோர் களம் இறங்கினார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரராக சொதப்பி வந்த ரச்சின் ரவிந்த்ரா இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னிங்சை தொடங்கிய ரகானே ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற அதற்குப்பிறகு ஒன்டவுனில் டாரி மிச்சல் களம் இறங்கினார். மறுமுனையில் கேப்டன் ருத்ராஜ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார்.

- Advertisement -

10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் மிச்சல் வெளியேற, அதற்குப் பிறகு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஆனால் இம்முறை ஜடேஜா 19 பந்துகளில் வெறும் 16 ரன்களை மட்டுமே குவித்து வெளியேற, அதற்குப் பிறகு வந்த சிவம் துபே ருத்ராஜூடன் கைகோர்த்தார். இவரின் வருகைக்குப் பின்னரே சென்னை அணியின் ரன் ரேட் வெகுவாக உயர்ந்தது.

லக்னோ அணியின் பந்துவீச்சை இந்த இருவரும் வெளுத்து வாங்கினர். வெறும் 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சிவம் துபே 3 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என 66 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் தரமான கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கேப்டன் ருத்ராஜ் 60 பந்துகளில் 12 பௌண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

பின்னர் ஆட்டத்தின் 19.4வது ஓவரில் சிவம் துபே ஆட்டமிழந்து வெளியேற மகேந்திர சிங் தோனியின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், தோனி களம் இறங்கியதும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். 19.5வது பந்தை ருத்ராஜ் ஒரு ரன் மட்டுமே எடுக்க கடைசி பந்த எதிர்கொண்ட தோனி பவுண்டரி விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

இதையும் படிங்க:தேசிய அணியை விட அவர் சிஎஸ்கேவில்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்.. காரணம் என்ன.? விளக்குகிறார் சோரிபுல் இஸ்லாம்

இதன் மூலம் 20 ஓவர்கள் விளையாடிய சென்னை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. மேலும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பனிப்பொழிவு சாதகமாக இருக்க கூடும் என்பதால், சென்னை அணி மிகுந்த கவனத்துடன் பந்து வீச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles