ஆர்சிபியின் ஸ்லீப்பர் செல்லா இவர்?. ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள்.. இவருக்கு இதுதான் கடைசி வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிஎஸ்கே தயாராகி வருகிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்பட்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் விராட் கோலிக்கு அடுத்ததாக அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இவரது பேட்டிங் திறமையை கண்டு சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

முதல் போட்டியில் களமிறங்கி 37 ரன்களும், இரண்டாவது போட்டியில் களமிறங்கி 46 ரன்கள் குவித்து அசத்திய ரச்சின் ரவீந்தரா அதற்குப் பிறகு விளையாடிய 5 போட்டிகளில் மொத்தமாக 46 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். இந்த போட்டியில் அவர் மொத்தமாக ஒருமுறை கூட 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 237 ஆக இருந்த நிலையில் கடைசி ஐந்து போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 108 ஆக குறைந்துள்ளது. கடந்த ஐந்து போட்டிகளில் மிகவும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரவீந்திராவை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டாரி மிச்சல் அல்லது மொயின் அலியை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் பெயரலாகி வருகிறது. அதில் தான் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

அதில் தன்னுடைய பூர்வீகம் பெங்களூர் என்றும், தனது தாத்தா பாட்டி ஆகியோர் பெங்களூரில் வசித்ததாகவும், சிறுவயதில் பெங்களூரில் அவ்வப்போது வருகை தந்து தங்கியிருந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று அதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:பழி தீர்க்குமா சென்னை அணி.? சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை.. சிஎஸ்கேவின் உத்தேச பிளேயிங் லெவன்

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் ட்ரெண்டாகி வருவதை தொடர்ந்து ரசிகர்கள் ரச்சின் ரவீந்தராவை ஆர்சிபி இன் ஸ்லீப்பர் செல் என்றும் பெங்களூர் அணியின் மேகதூதுவன் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே இந்த போட்டியில் ரவீந்திரா சிறப்பாக விளையாடி தன் மீது எழுந்திருக்கும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles