4 ஓவர்..18 ரன்.. 5 விக்கெட்.. மும்பை இந்தியன்சை கதறவிட்ட சந்தீப் சர்மா.. ஹர்திக் பாண்டியா சொதப்பல் பேட்டிங்

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

- Advertisement -

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் சந்திப் சர்மாவின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானமான ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி இன்னிங்சை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். அவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா வழக்கம் போல ஒரு பவுண்டரியுடன் ஐந்தாவது பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் இசான் கிஷான் சந்திப் ஷர்மாவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேற, அதற்குப் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 10 ரன்களில் ஆட்டம் இழந்து ஆச்சரியம் அளித்தார். 20 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த மும்பை அணியை திலக் வர்மா மற்றும் நெகல் வதேரா ஆகியோர் சரிவில் இருந்து விட்டனர்.

இந்த இருவரும் ஜோடி சேர்ந்து 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வதேரா 24 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 46 என்று குவித்து வெளியேறினார். மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 45 பந்துகளில் ஐந்து பௌண்டரிகள், மூன்று சிக்சர் என 65 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

- Advertisement -

இந்த நிலையில் அணியின் ரன்ரேட் சிறப்பாக சென்று கொண்டிருந்த போது கேப்டன் ஹர்திக் பாண்டியா களம் இறங்கி 10 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் ஆவேஷ் கானின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேற, அதன் பிறகு மும்பை அணி சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது. 19 ஆவது ஓவரில் ஆறு ரன்களும் இருபதாவது ஓரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்க முடிந்தது.

இதையும் படிங்க:நோ-பால் சர்ச்சை.. விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம் விதித்தது பிசிசிஐ.. கோபத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் கடைசி ஓவர் மிகச் சிறப்பாக வீசிய சந்திப் சர்மா நான்கு ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். இவரின் துல்லியமான வேகத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணி ரன்கள் குவிக்க முடியவில்லை. 190 ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் அபாரமான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி சரிவை சந்தித்தது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles