நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 176 ரன்கள் குவித்தும் பந்துவீச்சு சொதப்பலால் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது.
சென்னை அணி 176 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் மிடில் ஆர்டரில் களம் இறங்கி இக்கட்டான சூழ்நிலையில் அணியை காப்பாற்றிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 68 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, அப்போது களம் இறங்கி ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பாக விளையாடினார்.
40 பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 57 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அணியை காப்பாற்றிய நிலையில் அதற்கு பிறகு களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி ரன்களை அதிகப்படுத்தினார். ஒன்பது பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தோனி மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 28 ரன்கள் குவித்தார்.
இதனால் சென்னை அணி அணிக்கு சவாலான ஸ்கோரை லக்னோ அணி நிர்ணயித்தது. ஆனால் லக்னோ அணி களமிறங்கியது முதலே சென்னை அணியின் பந்துவீச்சை மிகவும் சுலபமாக எதிர்கொண்டு ரன்களை வேட்டையாட தொடங்கினர். கேஎல் ராகுல் மற்றும் டீ காக்கின் அபார ஆட்டத்தினால் 19 ஓவர்களில் 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இக்கட்டான சூழ்நிலையில் அணியை காப்பாற்றிய ரவீந்திர ஜடேஜாவை புகழ்ந்து பேசிய முன்னாள் சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு பேசும்பொழுது
“இக்கட்டான சூழ்நிலைகளில் எப்போதும் அணியை காப்பாற்றக் கூடிய ஒரு வீரராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். அவரது பேட்டிங் வரிசையை எந்த ஆர்டரில் மாற்றி களமிறக்கி விட்டாலும் சிறப்பாகவே செயல்படுகிறார்.
நேற்று லக்னோ அணிக்கு எதிராக அவர் பேட்டிங் செய்த விதம் அபாரமானதாக இருந்தது. அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவர் காப்பாற்றிய விதம் மிகவும் அருமை. பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் ரன்களை உயர்த்திய பெருமை அவருக்கு உண்டு. அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இதையும் படிங்க:தோனியின் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.. மீண்டும் வன்மத்தை கக்கிய கவுதம் கம்பீர்.. என்ன காரணம்?
ஆனாலும் தனது போராட்ட குணத்தை கைவிடாமல் கடைசி வரை விளையாடினார். மகேந்திர சிங் தோனிக்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூணாக இருந்து வருகிறார் கடந்த ஆண்டு சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கும் அவரை முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார். சென்னை அணி தனது அடுத்த போட்டியை இதே லக்னோ அணியுடன் சென்னை மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

