டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு கடினம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற மும்பை வீரர் பும்ரா பேட்டி

பஞ்சாபில் நடைபெற்ற 33வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா சிறப்பாக செயல்பட்டது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 25 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். அதற்கு பிறகு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய திலக் வர்மா 18 பந்துகளில் 34 ரன்கள் குவிக்க, இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 குவித்தது.

- Advertisement -

இந்த கடின இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து நெருக்கடிக்குள் உள்ளானது. கடந்த சில போட்டிகளாகவே பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் யாருமே சரிவர சிறப்பான பங்களிப்பை அளிப்பதில்லை. இந்த முறையும் கோட்டை விட்ட இவர்கள் 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்த நிலையில் 111 க்கு 7 விக்கெடுகளை இழந்தனர்.

- Advertisement -

இதற்கு பின்னர் வழக்கம்போல் களமிறங்கிய சசான்க் சிங் மற்றும் அசுதோசர்மா ஜோடி திரும்பவும் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. சசான்க் சிங் 25 பந்துகளில் 41 ரன்கள், இறுதிக்கட்டத்தில் மும்பை அணிக்கு பயம் காட்டிய அசுத்தோ சர்மா 28 பந்துகளில் 61 ரன்களும் குவித்தார். இறுதியில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்ததால் பஞ்சாப் அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா கூறும் பொழுது
“இந்த போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது. நாங்கள் நினைத்ததை விட இப்போட்டி இறுதிவரை சென்றது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் போது நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய நினைப்பீர்கள். டி20 கிரிக்கெட் பொருத்தவரை பந்து இரண்டு ஓவர்கள் மட்டுமே ஸ்விங் ஆகிறது. இது போன்ற பந்துவீச்சு சாதமான ஆடுகளத்தில் நான் நினைத்தது போல வீசி எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறேன்.

- Advertisement -

டி20 கிரிக்கெட் வடிவம் பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கிறது. மேலும் தற்போதுள்ள நேரக்கட்டுப்பாடு மற்றும் இம்பாக்ட் பிளேயர் போன்ற விதிகளால் பந்துவீச்சாளர்களின் பணியை இன்னும் கடினமாக்குகிறது. இம்பாக்ட் பிளேயர் விதியினால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களமிறங்குவதும் பந்துவீச்சாளர்களுக்கு பிரச்சனை இருக்கிறது. ஆனால் இதெல்லாம் நமது கண்ட்ரோலில் கிடையாது.

இதையும் படிங்க:நெருங்கி வந்த தோற்றதால் இதயம் நொறுங்கி விட்டது.. இந்த இளம் வீரர் அற்புதமாக விளையாடினார்.. தோல்விக்கு பின்னர் ஷாம் கரண் பேட்டி

நான் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் ஆலோசனைகளை வழங்க விரும்புவேன். ஆனால் அது போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் ஆலோசனை பெறுவதை விரும்ப மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். தற்போது மும்பை அணி மூன்று போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles