நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் பரபரப்பான கட்டத்தில் பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரண் தோல்வி குறித்து முக்கியமான காரணங்களை கூறியிருக்கிறார்.
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த போதிலும், மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய ரன்களைக் குவித்தனர். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 18 பந்துகளின் 33 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் ல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்தது 14 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, அதன் பிறகு 111 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய அசுத்தோஸ் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.
இதனால் இந்த பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரன் கூறும் பொழுது
“எங்கள் அணிக்கு பரபரப்பான ஆட்டம் மிகவும் பிடித்துப் போய்விட்டது போல் தெரிகிறது. வெற்றியின் அருகே வந்து தோல்வியைத் தழுவி விட்டோம். சிறப்பாக விளையாடிய அசுதோஸ் சர்மாவுக்கு எனது வாழ்த்துக்கள். நாங்கள் தடுமாறிய நேரத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி வரை அருகே கொண்டு வந்தார்.
இவ்வளவு அருகே வந்து தோற்பது யாருக்குமே பிடிக்காது. முக்கியமாக ரசிகர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இதயம் நெருங்கி விட்டது. சஷாங்க் சிங் மற்றும் அசுதோஸ் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இவர்கள் நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடினார்கள் அசுட்டோஸ் சர்மா குறிப்பாக விளையாடிய சில நாட்கள் அபாரமானதாக இருந்தது. இனிவரும் காலங்களில் போட்டியை வெற்றியுடன் எங்கள் வீரர்கள் முடிப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் பேட்டிங்கில் முன் வரிசையில் இறங்கி சொதப்பி வருகிறோம்.
இதையும் படிங்க:இனி தப்பவே தப்பாது.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. வசமாக சிக்கிய மும்பை
அதனை சரி செய்ய வேண்டும். இந்தத் தொடர் எங்களுக்கு ரோலர் கோஸ்டர் போல இருக்கிறது. முதலில் வெற்றி அடைகிறோம், பின்னால் தோல்வி அடைகிறோம் அதற்குப் பிறகு வெற்றியடைகிறோம். எனவே தோல்வி பாதையில் இருந்து மீண்டு திரும்பவும் வெற்றிப்பாதைக்கு செல்வோம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

