டி20 உலக கோப்பை இந்திய அணி.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு.. களமிறங்கும் சிஎஸ்கே வீரர்.. பலே திட்டத்துடன் ரோஹித் சர்மா

தற்போது இந்தியாவில் 17வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், இந்தத் தொடர் முடிந்தவுடன் அதற்கு அடுத்ததாக ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதில் முழு வீச்சில் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வரும் பிசிசிஐ இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை உலக கோப்பைக்கு தேர்வு செய்வதாக முன்னரே அறிவித்திருந்தது.

- Advertisement -

இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் முழு வீச்சில் தங்களது திறமையை ஐபிஎல்லில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதத் தொடக்கத்திலோ உலகக்கோப்பை காண இந்திய அணியின் வீரர்கள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் இடம்பெறப் போகும் இந்திய வீரர்கள் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொருத்தவரை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் பும்ரா ஒருவரை தவிர குறிப்பிட்டு சொல்லும் படி பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. முகமது சமியும் காயம் காரணமாக விலகி இருப்பதால் பிசிசிஐ முக்கியமாக பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் இந்திய அணியின் அனுபவ வந்து வீச்சாளரான புவனேஸ்வரகுமார் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனது அவர் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா என்று சந்தேகமே.

இதில் டி20 உலகக்கோப்பை அணியை வழிநடத்தும் ரோஹித் சர்மா ஆல் ரவுன்டர்களை எடுப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை எப்பொழுது பந்து வீசினாலும் அதிக ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும் பேட்டிங்கிலும் தற்போது வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் டி20 உலக கோப்பையில் இவரது இடம் தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிவம் தூபே இவரது இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:11 ஓவர்கள் மீதம் வைத்து டெல்லி அணி வெற்றி.. புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.. அடிமேல் அடி வாங்கிய குஜராத்

எனவே இதற்கான இறுதி வீரர்கள் குறித்த அறிக்கையை பிசிசிஐ இன்னும் சில வாரங்களில் வெளியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்தெந்த வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம் பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles