11 ஓவர்கள் மீதம் வைத்து டெல்லி அணி வெற்றி.. புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.. அடிமேல் அடி வாங்கிய குஜராத்

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி குஜராத் அகமதாபாத் மைனத்தில் நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இப்போட்டியில் டெல்லி அணி 12 ஓவர்கள் மீதும் வைத்து சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. குஜராத் அணிக்கு இது ஒரு மோசமான தோல்வி ஆகும்.

- Advertisement -

குஜராத் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஆரம்பம் முதலே டெல்லி அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குஜராத் அணியை பொருத்தவரை கேப்டன் கில்லை சார்ந்தே பேட்டிங் ஆர்டர் இருக்கும்.

- Advertisement -

கில் இந்த முறை 8 ரன்களில் வெளியேற, அதற்குப் பின்னர் எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. குஜராத் அணியின் ரஷீத் கான் மட்டுமே அதிகபட்சமாக 24 பந்துகளின் 31 ரன்கள் குவித்தார். குஜராத் அணியின் பேட்டிங் ஆர்டரில் 8 வீரர்கள் இந்த முறை ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் 17.3 ஓவர்களில் குஜராத் அணி 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. டெல்லி அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.இதை அடுத்து இந்த எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி ரன் ரேட்டை உயர்த்தும் முயற்சியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. டேவிட் வார்னருக்கு பதிலாக இந்த முறை பிரித்விஷா மற்றும் மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினர்.

- Advertisement -

தான் சந்தித்த முதல் பந்தியிலேயே சிக்ஸருக்கு விளாசி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் மெக்கர்க். 10 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என இருபது ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய அபிஷேக் பொரேல் 15 ரன்கள், சாய் ஹோப் 10 பந்துகளில் 19 ரன்கள் அடித்தனர். பேண்ட் இறுதியாக 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 ரன்கள் குவித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை உத்தேச வீரர்கள்பட்டியல்.. இசான் கிசானின் பெயர் நீக்கம்.. ஆப்பு வைத்த ரோஹித் சர்மா.. என்ன காரணம்?

இதன் மூலம் டெல்லி அணி மூன்றாவது வெற்றியைப் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 16 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று குஜராத் தனி தற்போது நான்காவது தோல்வியை சந்தித்து இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles