தினேஷ் கார்த்திக்கினால் தப்பிய சிஎஸ்கே.. இல்லைனா சன்ரைசர்ஸ் ஆப்பு வெச்சிருக்கும்.. கூறுகிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி தப்பித்ததாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் அதிரடிக்குப் பிறகு இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் உடன் கை கோர்க்க வேறு எந்த பேட்ஸ்மேன்களும் இல்லை. இறுதிக்கட்டத்தில் 35 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஐந்து பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 83 ரன்களை விளாசினார்.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் இவரது அதிரடி ஆட்டத்தால் மட்டுமே பெங்களூர் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. ஏழு போட்டிகளில் விளையாடி இருக்கும் பெங்களூர் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தால் ஆர்சிபி அணி நெட் ரன் ரேட்டும் அதல பாதாளத்திற்கு சென்றிருக்கும்.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க விடாததால் சென்னை அணியின் மூன்றாவது இடமும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது
“பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசையில் தினேஷ் கார்த்திக் மட்டுமே மிக அற்புதமாக விளையாடினார். அவரது 83 ரன்களால் மட்டுமே சன்ரைசர்ஸ் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்காமல் குறைவான ரன்களில் ஜெயித்தது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுமே தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நெட் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கும். தினேஷ் கார்த்திக்கால் மட்டுமே தற்போது சென்னை அணியின் மூன்றாவது இடம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று மேலும் பெங்களூர் அணியின் பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது” என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா தோனியை புகழவில்லை.. அதற்கு வேறு காரணம் இருக்கிறது.. ரகசியத்தை உடைக்கும் ஆடம் கில் கிறிஸ்ட்

இந்த தோல்வியின் மூலம் பெங்களூர் அணியின் தற்போது பத்தாவது இடத்தில் உள்ளது. இனி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற விரும்பினால் இனி வரும் அனைத்து போட்டிகளையும் நாக்கவுட் சுற்று போலவே நினைத்து வெற்றி பெற்றாக வேண்டும் என பெங்களூர் அணியின் தலைமை பயிற்ச்சியாளர் போட்டி முடிந்த பிறகு கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles