ஹர்திக் பாண்டியா தோனியை புகழவில்லை.. அதற்கு வேறு காரணம் இருக்கிறது.. ரகசியத்தை உடைக்கும் ஆடம் கில் கிறிஸ்ட்

நடந்து முடிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது மும்பை அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா தோனியை புகழ்ந்து பேசியதற்கு வேறு காரணம் இருக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருந்தது. அப்போது அணியின் தோல்விக்கு பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்டம்புக்கு பின்னால் மகேந்திர சிங் தோனி இருந்து தகுந்த ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார் என்று கூறினார்.

- Advertisement -

இதனைக் கேட்ட பலர் ஹர்திக் பாண்டியா மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து பேசி இருப்பதாக கூறினர். மேலும் அந்தப் போட்டியில் தோற்ற பிறகு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீதும் பேட்டிங் மீதும் விமர்சனங்களும் எழுந்தது. ஏற்கனவே மூன்று தோல்விகளை பெற்ற மும்பை அணிக்கு இது நான்காவது தோல்வியாக அமைந்திருக்கும் நிலையில், மும்பை அணி ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கரகோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

மும்பை அணி தன்னை அழைத்து கேப்டன்சியை ஒப்படைத்தது. என்னை நம்பி ஒப்படைத்ததற்கு அணியை சிறப்பாக வழி நடத்துவதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று அவர் மீதான விமர்சனங்களுக்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்திருந்த நிலையில், ரசிகர்கள் அவரை குறை கூறுவதை இன்னமும் நிறுத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த போட்டியில் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து பேசி இருந்த ஹர்திக் பாண்டியா, அவரது கருத்தை கூர்ந்து கவனித்து இருந்தால் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதை மறைமுகமாக கூறி இருக்கிறார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார். இது குறித்த அவர் விரிவாக கூறும்பொழுது
“தோனி பற்றி ஹர்திக் பாண்டியா பேசியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்தவித ஆதரவும் இல்லாமல் இருப்பது அவரது வார்த்தைகளில் உணர முடிகிறது.

- Advertisement -

தோனி தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ருத்ராஜிற்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் அது போன்ற ஆதரவு ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்கவில்லை என்பது அவரது வார்த்தைகள் மூலம் தெளிவாக உணர முடிகிறது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ரோஹித்காக என் வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன்.. பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அதிரடி

இவரது இந்த கருத்திற்கு தற்போது ரசிகர்கள் தானாக முன்வந்து ஒப்படைத்ததற்கும், வலுக்கட்டயமாக பறித்ததற்கும் வித்தியாசம் இருக்கிறது. தோனி தானாகவே முன்வந்து கேப்டன் பதவியை ஒப்படைத்தார். ஆனால் ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles