என்ன பண்ணனும்னு அவருக்கு தெரியும்.. அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தேவையற்றது.. கூறுகிறார் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்

இன்று நடைபெறுகிற முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் பற்றி சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் அவரது பேட்டிங் ஃபார்ம் பற்றி சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இன்று முக்கியமான ஆட்டமாகக் கருதப்படும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இதற்காக இந்த இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து அதற்குப் பிறகு இரண்டு போட்டியில் வெற்றி பெற்று வலுவாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

அதன் பிறகு வரிசையாக இரண்டு போட்டியில் தோல்வியடைந்து அதற்கு பின்னர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது. அணி வெற்றி பெற்றாலும் அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் மீது பேட்டிங் ஃபார்ம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஐந்து போட்டிகளில் விளையாடி 155 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். இவரது பேட்டிங் ஸ்டிரைக் கிரேட் 117.42 ஆகும்.

இவரது கேப்டன்சி அழுத்தத்தால் பேட்டிங் ஃபார்ம் பாதிப்படைந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறும் பொழுது
“இவர்கள் இருவருக்கும் இந்த வித்தியாசமும் கிடையாது.ருத்ராஜ் தோனியும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். போட்டியையும் மிகவும் கூலாக எடுத்துச் செல்கிறார்கள். கேப்டன்சியும் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பொதுவாக கேப்டனை வெற்றியை வைத்து தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாங்கள் வித்தியாசமாக மதிப்பிடுகிறோம். அணியை சுற்றிய அவரது தலைமை உயர்தரமாக இருக்கிறது. அவர் இன்னும் சென்னை அணிக்கு பல ஆண்டுகள் கேப்டனாக இருப்பார். ருத்ராஜ் விளையாட்டில் ஈர்க்கக் கூடிய ஒரு அற்புதமான இளைஞன். அவருக்கு தனது பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்று நன்றாகவே தெரியும். சில தேவையற்ற புள்ளி விவரங்களால் அவர் விமர்சனம் செய்யப்படுகிறார்.

இதையும் படிங்க: வலைப்பயிற்சியில் எல்லோரும் சென்ற பிறகு நான் இதை செய்வேன்.. அதுவே இன்று எனக்கு உதவியது.. ஆட்டநாயகன் விருது பெற்ற ஹெட் மயர் பேட்டி

அணியின் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விளையாடுகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான அவரது ஒரு ஆட்டம் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவரை நான் நம்புகிறேன். நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் மஞ்சள் நிறமாகவே இருக்கிறது. இதை முழுக்க முழுக்க தோனிக்கு கிடைத்திருக்கும் அன்பு. இதன் மூலம் நாங்கள் பயனடைந்து கொள்கிறோம்”என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles