நாளை ஐபிஎல்-லின் ‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இதற்காக சென்னை அணி வலுவான பிளேயிங் லெவலுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல்லில் ஐந்து கோப்பைகளை வென்றிருக்கிறது. அதற்கு சற்றும் சளைக்காத மற்றொரு அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து கோப்பைகளை வென்று சரிசமமாக உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்குமே அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பதால் ஒவ்வொரு சீசனிலும் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.
2010ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆரம்பித்த இந்த பங்காளி சண்டை சர்வதேச போட்டியில் எப்படி இந்தியா, பாகிஸ்தான் அணியோ அதேபோல ஐபிஎல் தொடரில் இந்த சென்னை மற்றும் மும்பை அணிகள். எனவே நாளை நடைபெற உள்ள போட்டி அதிக முக்கியத்துவம் வாயிலாக கருதப்படுகிறது.
மேலும் நாளை விடுமுறை தினம் என்பதால் இப்போட்டியை காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தற்போது ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி போட்டியில் வலுவான கொல்கத்தா அணியை வென்று மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத பத்திரானா அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது.
மேலும் சென்னை அணியில் பேட்டிங் பந்துவீச்சு ஃபீல்டிங் என அனைத்துமே சரிசமமான கலவையில் இருக்கிறது. அதுவே மும்பை இந்தியன்ஸ் அணியை எடுத்துக் கொண்டால், இந்த சீசனை மிகவும் சுமாராக ஆரம்பித்தது. விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
அதற்குப் பிறகு அணியில் உள்ள பிரச்சனைகளை களைந்து இரண்டு போட்டிகளின் மூலம் அபார வெற்றியை பெற்று தற்போது அடுத்த போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான மும்பை அணியின் பேட்டிங் வரிசை கடப்பாரையை விட்டுத் தோண்டி எடுப்பது போல விக்கெட் விழ விழ அதிரடி பேட்ஸ்மேன்கள் வந்து கொண்டே இருப்பார்கள். மேலும் உலகின் நம்பர் ஒன் வேரப்பந்துவீச்சாளர் ஆன பும்ராவும் அணியில் இருக்கிறார்.
இதையும் படிங்க:வீடியோ: வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சச்சின் மகன்.. சிஎஸ்கே எதிராக களம் இறங்குகிறாரா? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
இதனால் சென்னை இனி சற்று சுதாரிப்புடனே களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே சென்னை அணியில் பத்திரானா திரும்ப களமிறங்குவதால் சுழற் பந்துவீச்சாளரான தீக்சானா வெளியேறலாம். மேலும் இப்போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிப்பதால் முதலில் டாஸ் ஜெயிக்கும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும்.
சென்னை அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (விகே), ஷர்துல் தாக்கூர், மதீசா பத்திரானா , துஷார் தேஷ்பாண்டே,
முஸ்தாபிசுர் ரஹ்மான்.

