வீடியோ: வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சச்சின் மகன்.. சிஎஸ்கே எதிராக களம் இறங்குகிறாரா? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

நாளை மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே முக்கியமான ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் வலை பயிற்சியில் பந்து வீசும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

எனவே நாளைய போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுகிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2021ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் முப்பது லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் வாங்கப்பட்ட முதல் இரண்டு வருடங்களில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தராமல் வைத்திருந்தனர்.ஒவ்வொரு சீசனிலும் வலை பயிற்சியில் மட்டுமே பந்து வீசிக் கொண்டிருந்த அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முதன் முறையாக மும்பை அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார். பவுலிங் ஆல் ரவுண்டரான இவர் கடந்த சீசனில் மும்பை அணிக்காக நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -

நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இவரது பந்து வீச்சு எக்கானமி 9.36 ஆக அமைந்துள்ளது. நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் அதற்குப் பிறகு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பிறகுதான் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியிருக்கிறது. இவ்வாறு அணி இக்கட்டாக இருக்கும் சூழ்நிலையில் இவருக்கு வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்காது என்று கருதி இந்த சீசனிலும் இவர் பெஞ்சிலே அமர வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நாளை மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் வந்து வீசி பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அவர் வீசிய இரண்டு பந்துகள் ஸ்டெம்பை நோக்கி குறிபார்த்து சரியான லெந்தில் வீசுகிறார். இதனைப் பார்த்து பந்துவீச்சு பயிற்சியாளர் ரசித் மலிங்கா ஆச்சரியப்படுகிறார். இப்படி ஒரு வீடியோ தொகுப்பு அதில் அடங்கியிருக்கும்.

இதையும் படிங்க:வீடியோ: ஆல் ஏரியாலயும் சிஎஸ்கே கில்லி.. வான்கடேவில் மஞ்சள் படை.. தாக்குப் பிடிக்குமா மும்பை இந்தியன்ஸ்

எனவே அர்ஜுன் டெண்டுல்கர் நாளை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறதா? என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். ஏற்கனவே சென்னை, மும்பை போட்டி அதிக முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் விளையாடுவது உறுதியானால் இன்னும் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles