வீடியோ: ஆல் ஏரியாலயும் சிஎஸ்கே கில்லி.. வான்கடேவில் மஞ்சள் படை.. தாக்குப் பிடிக்குமா மும்பை இந்தியன்ஸ்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் “எல் கிளாசிகோ” போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

ஐபிஎல்லைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டிதான். இரு அணிகளுக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் சமூக வலைதளங்களில் எந்த அணி வெல்லும் என்ற வாக்குவாதம் இப்போதே தொடங்கி விட்டது.

- Advertisement -

முன்பு இல்லாததைப் போல கடந்த சில சீசன்களாகவே சென்னை அணி எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அங்கு மஞ்சள் படை ரசிகர்கள் நிரம்பி வழிகின்றனர். காரணம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி சீசன் ஆக இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுவதால் தோனியைக் காண ஒவ்வொரு போட்டிக்கும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் மைதானத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

பொதுவாக மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை ரசிகர்களே அதிகம் கூடும் நிலையில், கடந்த சில சீசனங்களாகவே சென்னை ரசிகர்களும் அதிக அளவில் கூடி தங்களது ஆதரவை மும்பையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாளை தொடங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கு பெற சென்னை வீரர்கள் அடங்கிய பேருந்து வான்கடே மைதானத்திற்கு வந்தது.

அப்போது மைதானத்தின் வெளியே நின்று இருந்த சென்னை ரசிகர்கள் பேருந்தில் அமர்ந்திருந்த வீரர்களுக்கு கைகாட்டி தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர். அங்கே இருந்த வீரர்களை படம் எடுத்தும் அவர்களுகடன் கைகுலுக்கியும் தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தினர். இதனை வீடியோ எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டது.

- Advertisement -

இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை தற்பொழுது ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். மேலும் இந்த மைதானத்தில் மும்பை அணியின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால் நாளை அதை உடைத்து சென்னை அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் மும்பை அணி தோல்வி பாதையில் இருந்து மீண்டு வந்து தற்போது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் வலுவான நிலைக்கு திரும்பி இருக்கிறது.

இதையும் படிங்க:ஸ்கூல் பீஸ் கட்டல.. 65ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி மகள்களின் ஆசையை நிறைவேற்றிய தந்தை.. வைரலாகும் வீடியோ

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்என இரண்டிலுமே இரு அணிகளும் சம பலம் பாய்ந்ததாக கருதப்படுவதால் இப்போட்டி ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் நாளை விடுமுறை தினம் என்பதால்தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles