நாடு விட்டு நாடு தாண்டி மானம் போகுது.. ஆர்சிபியைக் கலாய்க்கும் ஓட்டப்பந்தய வீரர்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

கடந்த 16 வருடங்களாக கோப்பையை வெல்ல போராடிவரும் பெங்களூர் அணி, இந்த ஐபிஎல் தொடரிலும் ஆறு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியும் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடிக்குமானால் பிளே ஆப் சுற்றுக்கு கூட கடைசியில் தகுதி பெறாது.

- Advertisement -

பெங்களூர் அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இரண்டு வீரர்கள் மட்டுமே அணிக்காக தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். மற்ற வீரர்களான கேமரூன் கிரீன், பாப் டு ப்ளஸ்சிஸ் ஆகியோர் தொடர்ச்சியான பங்களிப்பை அளிக்க மறுக்கின்றனர். அதிலும் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங்கில்தான் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்றால் பந்துவீச்சு அதைவிட மோசமான நிலைமையில் இருக்கிறது. பேட்டிங்கில் 200 ரன்கள் குவித்தாலும் பந்துவீச்சில் 15 ஓவர்களிலேயே விட்டுக் கொடுக்கிற அளவுக்கு பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இப்படி தோல்வி மேல் தோல்வி பெற்று வரும் ஆர்சிபி அணியை இந்தியாவில் மட்டும்தான் கிண்டல் செய்கிறார்கள் என்றால், தற்போது நாடு விட்டு நாடு தாண்டி விமர்சிக்கும் அளவிற்கு சென்று இருக்கிறது.

ஜமைக்காவை சேர்ந்த பிரபல ஒலிம்பிக் விளையாட்டு வீரரான யோகன் பிளாக் ஆர்சிபி அணியை கேலி செய்திருக்கிறார். இது குறித்து கூறிய அவர்
“சூரியகுமார் யாதவ் எவ்வாறு பேட்டிங் செய்வார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் ஆர்சிபி அணியை பொறுத்த வரை இது ஒரு மோசமான பந்துவீச்சு” என்று பதிவிட்டுள்ளார். யோகன் பிளாக் ஒரு ஓட்டப்பந்தய வீரராக இருந்தாலும் ஓய்வு நேரங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஒரு கிரிக்கெட் அணியை வாங்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான் ஓட்ட பந்தயத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருப்பேன். அதற்குப் பிறகு எனக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட்தான். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட மாட்டேன். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

இதையும் படிங்க :பும்ரோ ரொம்ப மோசம்.. ஒன்னு காலை உடைக்கிறாரு இல்லன்னா பேட்ட உடைக்கிறாரு.. சூர்ய குமார் யாதவ் பேட்டி

ஐபிஎல் தொடரில் ஒரு டீமை வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கொல்கத்தா அல்லது பெங்களூர் அணியை வாங்க முயற்சி செய்வேன்” என்று கூறியிருக்கிறார். இந்த உரையாடல் 2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த போது ஆர்சிபி அணி நீங்கள் நன்றாக ஓடும் அளவுக்கு வேகமாக பந்து வீசினால் எங்கள் அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கூறியிருந்தது. தற்போது ஆர்சிபி அணியின் பந்துவீச்சை விமர்சனம் செய்திருக்கிறார் யோகன் பிளாக்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles