13 வருடத்திற்கு முன்னாடி தோனி என்கிட்ட என்ன சொன்னாரோ அதையே தான் இப்பவும் சொல்றாரு.. கூறுகிறார் சிஎஸ்கே வீரர் ரகானே

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இந்தத் தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் இதுவரை விளையாடி அதில் மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியையும் தழுவி இருக்கிறது.

- Advertisement -

2023ஆம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் இந்திய வீரர் ரகானேவை அவரது அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்தது மட்டுமல்லாமல் அவருக்கு உடனடியாக வாய்ப்பை கொடுத்து மூன்றாவது இடத்தில் களம் இறக்கியது.

- Advertisement -

ரகானேவின் ஸ்ட்ரைக் ரேட் பொதுவாக மெதுவாகவே இருக்கும். ரன்களை குவிக்க சற்று அதிக பந்துகளை எடுத்துக் கொள்வார் என்றுதான் அவர் மீது கூறப்படும் கருத்து. ஆனால் சென்னை அணிக்கு சென்ற பிறகு சிறப்பான ஸ்ட்ரைக் ரைட்டில் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். 2023 ஆம் ஆண்டு சீசன் முழுவதுமே சென்னை அணிக்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அவரின் அதிரடி ஆட்டம் பின்னால் வந்த வீரர்களுக்கு சற்று அழுத்தமில்லாமல் விளையாட உதவியது. சென்னை அணி எதற்காக அவரை நம்பி மூணாவது இடத்தில் களம் இறக்கியதோ அந்த வேலையை கணக்கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த ஆண்டும் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே களமிறங்கி வரும் அவர் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை.

சிஎஸ்கே குறித்தும் தோனி குறித்தும் சில சுவாரசியமான தகவல்களை ரகானே பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“இதனை வேறு மாதிரியாக கூற வேண்டும் என்றால் நாங்கள் ஐபிஎல்லில் விளையாடும் அனைத்து போட்டிகளும் எங்கள் சொந்த மைதானத்திலேயே விளையாடுவது போல் ஒரு உணர்வை கொடுக்கிறது. அதற்கு முழுக்க முழுக்க ஒரே ஒரு காரணம் மகேந்திர சிங் தோனி மட்டுமே.

- Advertisement -

இந்த உணர்வு மிகவும் அற்புதமானது. நான் தோனியுடன் இணைந்து விளையாடும் போது ஒரு கிரிக்கெட் வீரராகவும் மனிதராகவும் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். ஒரு போட்டியை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்கிறார் என்பதைக் காண அற்புதமாக இருக்கும். தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை மற்றும் மகாராஷ்டிரா வீரர்கள் இருக்கிறோம்.

இதையும் படிங்க:வீடியோ: வசமா மாட்டிக்கிச்சு.. மும்பை ஆர்சிபி டாஸில் நடந்த தில்லு முல்லு.. வெளியான ஆதாரம்

இந்த சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. நான் 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான தருணம். முதல் போட்டியில் விளையாடுவதற்காக எனது பயிற்சி முடித்துக் கொண்டிருந்த போது மகேந்திர சிங் தோனி என்னிடம் “இதுவரை எப்படி போட்டிக்கு தயாரானீர்களோ அதேபோல மைதானத்தில் உங்களை வெளிப்படுத்தி விளையாடுங்கள். எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறினார். தற்போது சிஎஸ்கே அணிக்கு வந்த பொழுதும் இதையே தான் கூறுகிறார். தோனி ஒரு கிரேட். அவர் அணில் வீரர்கள் ஒவ்வொருவர் மீதும் அக்கறையாக இருக்கக்கூடியவர்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles