சிக்ஸர் அடிச்சு ஜெயிக்க வைக்கிறது ஓகே.. ஆனா அதுக்கு முன்னாடி இந்த விஷயம் நம்மகிட்ட இருக்கணும்.. வெற்றிக்குப் பின் ரஷீத் கான் பேச்சு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதானமான ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. தொடக்க ஜோடி விரைவிலேயே பிரிந்தாலும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 38 பந்துகளில் ஏழு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 68 ரன்களைக் குவித்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அணியின் இளம் வீரர் ரியான் பராக் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் மூன்று பவுண்டரி,5 சிக்சர் என 74 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதனால் ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் சுழற் பந்துவீச்சாளரான ரசித் கான் அபாரமாக பந்துவீசி நான்கு ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். பின்னர் 197 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது.

- Advertisement -

குஜராத் அணியின் கேப்டன் கில்லை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே குறைந்த ரண்களிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் கேப்டன் கில் பதினாறாவது ஓவர் வரை களத்தில் நின்று 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 72 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.

இதனால் அணியின் தேவைக்கு மூன்று ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரஷித் கான் மற்றும் ராகுல் திவேட்டியா ஆகியோர் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தனர். ரஷித் கான் 11 பந்துகளில் 24 ரன்களும், திவேட்டியா 11 பந்துகளில் 22 ரன்களும் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

- Advertisement -

குஜராத் அணியின் வெற்றிக்கு பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷீத் கான் பேசும் பொழுது
“எனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதை விட அணி வெற்றி பெற்றதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் தற்போது பந்துவீச்சில் சில சிரமங்களை சந்தித்தேன். நடுவில் எனக்கு பயிற்சி செய்வதற்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. அதன் மூலம் இழந்த ஃபார்மை திரும்ப மீட்டெடுக்க எனக்கு உதவிகரமாக இருந்தது.

இதையும் படிங்க:தோற்பதை விட.. தோல்விக்கான காரணம் சொல்வது கடினமாக இருக்கிறது.. சஞ்சு சாம்சன் பேட்டி

நான் பந்துவீச்சில் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். அதிக ரன் ரேட் எதிர்நோக்கி விளையாடும் போது மூன்று அல்லது நான்கு சிக்ஸர்கள் அடிப்பது ஒரு விஷயம் தான். அவ்வாறு செய்தால் அணியின் ரன்ரேட் தானாக குறைந்து விடும். ஆனால் அதற்கு எப்போதும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் பாசிட்டிவாக உணர்கிறோமோ அவ்வளவு செயல் திறன் வெளியே வரும். நான் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles