ஜெய்ப்பூரில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது. அதனால் பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்களும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்களும் குவித்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் எட்டு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 196 ரன்கள் குவித்தது. குஜராத் அணிதரப்பில் pந்து வீசிய ரஷீத் கான் நான்கு ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் 197 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு அணியின் கேப்டன் கில்லை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்கலிலேயே வெளியேறினர். இதனால் ஆட்டம் கிட்டத்தட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறும் நிலையிலே இருந்தது. கில் 44 பந்துகள் 72 ரன்கள் குவித்து வெளியேற நிலையில் கடைசி மூன்று ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது விளையாடிய ரஷீத் கான்24 ரன் (11பந்து), மற்றும் ராகுல் திவேட்டியா 22 ரன் (11 பந்து) ஆகியோர் அதிரடியாக விளையாடி குஜராத் அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த எதிர்பாராத தோல்விக்கு பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சுஸ் சாம்சன் கூறும் பொழுது
“ஆட்டத்தின் கடைசி பந்தில் தோற்பதை விட, எங்கு தோற்றம் எப்படி தோற்றம் என்பதை இங்கு வந்து சொல்வது தான் கஷ்டமாக இருக்கிறது. சிறிது நேரம் கொடுத்தால் தெளிவாக சொல்வேன். குஜராத் அணியின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டும் வகையில் இருக்கிறது.
180 ரன்கள் குவித்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி 197 ரன்கள் குவித்தது வெற்றி பெற்று விடலாம் என்று நம்பினேன். இன்று பனிப்பொழிவும் பெரிதாக இல்லை விக்கட்டும் நன்றாக இருந்தது. இந்த சூழ்நிலையில் நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும். நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இந்த மைதானத்தில் பனிப்பொழிவு இல்லை என்றால் 197 ரன்களை நம்பலாம் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: 3 ரன்னை தாண்டாத 5 பேர்.. ஒரே ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. ஜடேஜாவின் சுழலில் சிக்கிய கொல்கத்தா.. சென்னை அணி சிறப்பான வெற்றி
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்திலேயே இருக்கிறது. குஜராத் அணி தற்போது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து ஆறாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

