2023ஆம் ஆண்டு 17 ஆவது ஐபிஎல் பிரிமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இது வருகிற மே மாதம் 26 ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவடையும் நிலையில், அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.
இந்த ஏலத்தில் ரிடெயின் செய்யும் வீரர்களின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்று சில ஐபிஎல் அணிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் மினி ஏலம், மெகா ஏலம், டிரேடிங் முறையில் வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்ற நிகழ்வுகளின்மூலம் ஐபிஎல் அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும்.
அதிலும் மெகா ஏலம் என்றால் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த வருட கடைசியில் நடைபெற உள்ளதால், அதற்கான எதிர்பார்ப்பு இப்பொழுதே அதிகரித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு ஐபிஎல் அணி நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற ஏலத்தின் விதிப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது.
அதாவது நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஒரு வீரரை ஆர்டிஎம் கார்டு அதாவது ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி ஒரு வீரரை வாங்கிக் கொள்ளலாம். அதாவது இந்த விதியின் மூலம் 5 வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இதில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது நடந்து முடிந்துள்ள ஏலத்தின் மூலம் அனைத்து ஐபிஎல் அணிகளும் இளம் வீரர்களைக் கொண்டு அந்தந்த அணிகளை வலிமையாக கட்டமைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் இந்த சீசனில் வலிமையாகவே விளையாடி வருகின்றன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மெகா ஏலத்திற்காக அனைத்து வீரர்களை வெளியே விட நேரிடும்.
வெளிய விட்டுவிட்டு திரும்பவும் இந்த வீரர்களை வாங்கி கட்டமைப்பது என்பது மிகவும் கடினமான காரியம். இதனால் ஐபிஎல் அணிகள் நான்கு வீரர்களுக்கு பதிலாக 8 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இளம் வீரர்களின் ஆதிக்கம் இந்த ஐபிஎல் தொடரில் நிறைந்துள்ளதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வீரர்களை நிரந்தரமாக தக்க வைக்க ஐபிஎல் அணிகள் முடிவு செய்து இருக்கிறது.
இதையும் படிங்க:இந்தியாவில் ரிட்டயர்டு ஆகி.. இனி இந்திய அணிக்கு எதிராக ஆடப்போறேன்.. உலக கோப்பையை வென்ற வீரர் பரபரப்பு பேட்டி
இதனால் ஐந்து வீரர்களுக்கு பதிலாக எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் இது குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறது மற்றும் என்னென்ன புதிய விதிகள் கொண்டு வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

