17 வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது முதல் வெற்றியைப் பெற்று அனைத்து அணிகளும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் தனது சிறந்த கேப்டனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கடந்த சீசனில் விளையாடிய அணிகளின் கேப்டன்கள் ஒரு சிலரைத் தவிர மற்ற அணிகளின் கேப்டன்கள் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு குஜராத் அணியில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி ஏலத்தில் எடுத்து கேப்டனாக அறிவித்தது.
மேலும் பும்ரா மற்றும் ஹார்த்திக் பாண்டியா என்று இரண்டு வலுவான வீரர்கள் மீண்டும் மும்பை அணியில் இணைந்ததால் சிறப்பான வெற்றிகளை பெறும் என்று நினைத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடி தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து வெளியேறிய தொடர்ந்து அந்த அணியின் இளம் வீரரான கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு தனது கேப்டன்சியை விட்டு விலகி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் வசம் ஒப்படைத்தார். டெல்லி அணிக்கு காயத்திலிருந்து மீண்டு வந்த ரிசப் பண்ட் மீண்டும் கேப்டனாக டெல்லி அணியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட மார்க்ரம்மை தூக்கி விட்டு 20 கோடிக்கு ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட கம்மின்சை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். ராஜஸ்தான் மற்றும் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளை பொறுத்த வரை சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டனாகவே இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2024 ஐபிஎல்லில் தனது சிறந்த கேப்டனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தற்போது வர்ணனையாளர் குழுவில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்திடம் ஐபிஎல் இல் சிறந்த கேப்டனை தேர்ந்தெடுக்குமாறு கூறப்பட்டது. அவருக்கு முதலில் ரிசப் பண்ட் மற்றும் பாப் டு பிளசிஸ் ஆகிய பெயர்கள் கட்டப்பட்டது. அதில் பண்டை தயக்கம் இன்றி தேர்வு செய்தார். அதற்குப் பின்னர் கெய்க்வாட் மற்றும் சிகார்தவான் ஆகியோருடன் ஒப்பிட்ட நிலையில், மீண்டும் பண்டையே சிறந்த கேப்டனாக தேர்வு செய்தார்.
இதையும் படிங்க:17.3வது ஓவரில் தோனி செய்த விஷயம்.. சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி.. பேசாமலே புரிய வைத்த தோனி
அதற்குப் பிறகு பண்ட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோரை ஒப்பிட்டு கேட்கப்பட்டபோது கம்மின்சை தயக்கம் இல்லாமல் தேர்வு செய்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா, சிகார் தவான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரை வீழ்த்திய கம்மின்ஸ், அதற்குப் பிறகு சஞ்சு சாம்சுனுடன் கம்பின்சை ஒப்பிட்டபோது இறுதியாக சஞ்சு சாம்சனை சிறந்த கேப்டனாக தேர்வு செய்தார். சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது

