இவருக்கும் டெல்லி அணிக்கும்தான் போட்டியே.. இந்த வெற்றி சும்மா வரல- வெற்றிக்கு பின் பாண்டியா பேட்டி

ஐபிஎல் திருவிழாவில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தோற்கடித்தது. முதல் வெற்றியைப் பெற்ற பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியான சில தருணங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா 49 ரன்கள் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இசான் கிசான் 42 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

தொடக்கம் சிறப்பாக அமைந்ததால் அதற்குப் பிறகு வந்த வீரர்கள் சுலபமாக ரன்கள் குவிக்க வழி வகுத்தது. இதற்குப் பிறகு ஹர்த்திக் பாண்டியா 39 ரன்களும்,டிம் டேவிட் 45 ரன்களும் குவிக்க இறுதியாக களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி வீர ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். குறிப்பாக நோக்கியா வீசிய கடைசி ஓவரில் ரொமாரியா ஷெப்போர்டு 32 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை அணிவது 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234ரன்கள் குவித்தது. பின்னர் 235 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் 10 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு களம் இறங்கிய அபிஷேக் போரேல் நிதானமாக விளையாடி 31 பந்துகளில் 41 ரன்கள் குவிக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிருத்விஷா அதிரடியாக விளையாடினார். 40 பந்துகளில் 66 ரன்கள் குவித்த பிரித்விசா ஆட்டமிழந்து வெளியேற, அதன் பிறகு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்டெப்ஸ் அதிரடி ஆட்டத்தினை கையில் எடுத்தார். 25 பந்துகளை எதிர் கொண்ட இவர் 71 ரன்கள் குவித்தார்.

இருப்பினும் இறுதியில் பந்துகள் இல்லாததால் டெல்லி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது. முதல் வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது
“இந்த வெற்றிக்கு பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. நாங்கள் தெளிவான மனநிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இப்பொழுது 12 பேர் கொண்ட அணியை தீர்மானிப்பது முக்கியம். நம்பிக்கையுடன் ஒருவரை ஒருவர் நாங்கள் ஆதரிக்க வேண்டும். எங்களுக்கு தற்போது ஒரே ஒரு வெற்றி தேவை என்று அனைவரும் நம்பினார்.

- Advertisement -

தொடக்கம் இப்பொழுது அற்புதமாக அமைந்திருக்கிறது. ஆறு ஓவர்களில் 70 ரன்கள் எடுப்பது என்பது எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அனைவரும் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. ரொமாரியோ ஷெப்பர்டின் சில ஷாட்கள் மிகவும் அருமையானதாக இருந்தது. அவர் இந்த ஆட்டத்தை வென்றுள்ளார். இது ரொமாரியோ ஷெப்பர்டு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினருக்கிடையேயான ஆட்டம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

இதையும் படிங்க:வீடியோ: 4,6,6,6,4,6 என்னா அடி.. வான்கடேவை அலறவிட்ட மும்பை பேட்ஸ்மேன்.. 234 ரன்கள் குவித்த மும்பை அணி

அவரது முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும். நான் ஏன் பந்து வீசவில்லை என்பது குறித்து கேட்கிறீர்கள். நான் நன்றாக இருக்கிறேன் தேவை வரும்போது கண்டிப்பாக பந்து வீசுவேன். இன்று நாங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டோம். அதனால் இன்று நான் பந்து வீசுவதற்கான தேவை இல்லை என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles