மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்து இருக்கிறது. கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சார்ந்த ரொமேரியோ செப்பர்டு மும்பை ரசிகர்களுக்கு வான வேடிக்கையைக் காட்டினார்.
மும்பை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்று இஎஸ்ஏ போட்டியை முன்னிட்டு மும்பையில் 20 ஆயிரம் குழந்தைகள் போட்டியை கண்டுகளிக்க இலவசமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் தொடங்கினர். சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரோகித் சர்மா 27 பந்துகளில் ஆறு பௌண்டரி, மூணு சிக்ஸர்கள் என 49 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியை உற்சாகமாக துவங்கிய ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக அக்சர் பட்டேலின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
காயத்திலிருந்து மீண்டு வந்த சூரியகுமார் யாதவ் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இஷான் கிஷான் 23 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெளியேற, அதன் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தார். திலக் பர்மா ஆறு ரன்களில் வெளியேறினாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியாக விளையாடினார்.
மறுமுனையில் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் என 39 ரன்கள் குவித்து வெளியேற, அதன் பிறகு இறுதிக் கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ரொமாரியா ஷெப்பர்ட் களமிறங்கினார். மறுமுனையில் டிம் டேவிட் 21 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 45 ரன்கள் குவித்தார்.
மும்பை அணி இறுதியில் 200 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இறுதி ஓவரை டெல்லி அணியின் ஆண்ட்ரிக் நோக்கியா வீச அதனை ரொமாரியா ஷெப்பர்ட் எதிர்கொண்டார். முதல் பந்தை ஸ்ட்ரைட்டாக பவுண்டரி அடித்த அவர், இரண்டாவது பந்தை அபாரமாக சிக்சருக்கு விலாசினார்.
மூன்றாவது பந்தை திரும்பவும் சிக்ஸருக்கு விலாச, நான்காவது பந்தை ஃபுல் சாட்டில் ஆப் சைடு சிக்ஸருக்கு விலாச, தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அமர்க்களபடுத்தினார். ஐந்தாவது பந்தையும் பவுண்டரி விளாசி அவர் ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாச அந்த ஓவரில் மட்டும் 32 ரன்கள் குவித்தார். 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சர்கள் என 39 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2024: பிசிசிஐ வெளியிட்ட புதிய ஃபேன் பார்க் அட்டவணை.. இரண்டு தமிழக மாவட்டங்களுக்கு ஜாக்பாட்
டிம் டேவிட் மற்றும் ரோமாரியா ஷெப்பர்ட் ஜோடி 16 பந்துகளில் 51 ரன்கள் குவித்தன. இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. இந்த மிகப்பெரிய இலக்கை குவித்த மும்பை அணியில் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது. இந்த மிகப்பெரிய இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாட தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.
THE CRAZIEST FINAL OVER HITTING. 🤯
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 7, 2024
– Romario Shepherd smashed 4,6,6,6,4,6 against Nortje. 🔥 pic.twitter.com/8enitnQVVH

