இந்தியாவில் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு கிரிக்கெட் என்றால் அதனை இன்னும் மெருகேற்றி ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் லீக் தொடர். 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு வரை தற்பொழுது வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டால் பெரிதும் கவரப்பட்ட இந்திய ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களை காண மைதானங்களுக்கு சென்று தங்களது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்துவார்கள். மேலும் தங்களுக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசினால், தங்கள் கைகளில் இருக்கும் பதாகைகளைக் காண்பித்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.
டிக்கெட்டுகளை வாங்கி ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால், டிக்கெட் கிடைக்காத ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிசிசிஐ ஃபேன் பார்க் என்னும் பொழுதுபோக்கு அம்சத்தை கொண்டு வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஃபேன் பார்க் என்ற முறையை அறிமுகப்படுத்திய பிசிசிஐ, கிரிக்கெட்டை உலகம் முழுவதும் சென்றடைய வைக்கும் நோக்கில் இந்த முறையை அமல்படுத்தியிருக்கிறது. அதாவது ஒரு பெரிய காலியான மைதானத்தில் பெரிய திரைகளை அமைத்து அதில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி, அதில் ரசிகர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வந்து போட்டியை உற்சாகமாக கண்டு களிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஃபேன் பார்க் அரங்கில் உணவு, அரங்கம், இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் இடம்பெறும். ஐபிஎல் 2024கான முதல் ஃபேன் பார்க் முடிந்ததை அடுத்து இரண்டாவது பேன் பார்க் அட்டவணையை தற்போது பிசிசியை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களின் பெயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறுகிறது. அதற்குப் பிறகு 18 மற்றும் 19ஆம் தேதிகளில் திருச்சியில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தேதிகளிலும் தமிழ்நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் மே 4, 5-ம் தேதியிலும், ஆக்ராவில் 24 மற்றும் 26ம் தேதியிலும் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மே 11 மற்றும் 12ஆம் தேதிகளிலும், கோட்டாவில் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறுகிறது. வெஸ்ட் பெங்கால் ஜால்பாய்குறியில் 11 மற்றும் 12ஆம் தேதியிலும், மகாராஷ்டிரா மாநிலம் கோளப்பூரில் ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதியிலும், ரத்னகிரியில் 27 மற்றும் 28ஆம் தேதியும் நடைபெறுகிறது.
மேலும் புதுச்சேரி மாவட்டத்தில் மே 4 மற்றும் 5ம் தேதியிலும், உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் ஏப்ரல் 27 மற்றும் 28ம் தேதியிலும், குஜராத் மாநிலம் வதோதராவில் மே 24 மற்றும் 26 ஆம் தேதியிலும், கர்நாடக மாநிலம் பில்காவியில் ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதியிலும், மங்களூரில் மே 4 மற்றும் 5ம் தேதியிலும், ஹுபாலியில் 18 மற்றும் 19ம் தேதியில் நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் 27, 28 ஜார்கண்ட் மாநிலம் தான்பந்திலும், ஏப்ரல் 20, 21 பஞ்சாப் மாநிலம் பாட்டியானாவிலும், ஏப்ரல் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் லூதியானாவில் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 13 மற்றும் 14ம் தேதிகளில் வராங்காவில் நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பில்லாயில் 20 மற்றும் 21 ஏப்ரல் மாதத்திலும், ஆந்திர பிரதேசம் குண்டூரில் ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் தேதியிலும், திருப்பதியில் ஏப்ரல் 27 மற்றும் 28ம் தேதியிலும், அசாம் மாநிலம் ஜார்கென்டில் பதினெட்டு மற்றும் 19ஆம் தேதியிலும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:எதுக்கு இந்த டீம்.. இப்படி விளையாடுவதற்கு பேசாமல் கலைத்து விடலாம்.. முகமது கைஃப் காட்டமான விமர்சனம்
பீகார் மாநிலம் பாட்னாவில் மே 4 மற்றும் ஐந்தாம் தேதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசம் அமிர்பூரில் ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் தேதியிலும், சிம்லாவில் மே 18 மற்றும் 19ஆம் தேதியிலும், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் தேதியிலும், ஜபல்பூரில் ஏப்ரல் 27 மற்றும் 28, குவாலியரில் மே 14 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறுகிறது. கேரள மாநிலம் பாலக்காட்டில் மே 11 மற்றும் 12ஆம் தேதியிலும், கோவாவில் 24 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறுகிறது.
BCCI announces schedule for Phase Two of TATA IPL Fan Park 2024#IPL2024 pic.twitter.com/etQZaeoVeO
— Srinivas Das (@Srini2748) April 7, 2024

