இந்தியாவில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குடிநீரை பயன்படுத்துவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பெங்களூருவில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே இயங்கி வருவதால் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணி செய்யுமாறு அந்தந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகளுக்கு வீட்டிலிருந்து ஆன்லைன் முறையில் கல்வி கற்க கர்நாடக அரசு உத்தரவு விட்டுள்ளது. மேலும் தற்போது ஏப்ரல் மாதம் கோடை காலம் என்பதால் மிக அதிக தண்ணீர் தேவை தற்போது அதிகரித்துள்ளது. நகரில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறண்டு காணப்படுவதால், நகரங்களில் வசிக்கும் மக்கள் லாரி தண்ணீரை எதிர்நோக்கியுள்ளனர்.
பெங்களூரு நகரத்தில் ஏறக்குறைய ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் வசித்து வருவதால், மக்களின் அன்றாட தேவைக்கே தண்ணீர் 1500 லிட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கர்நாடக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னரே தண்ணீர் தட்டுப்பாடு குறித்து செய்தி வெளியான நிலையில், கர்நாடக கிரிக்கெட் வாரியம் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவலை கொள்ள தேவை இல்லை என்றும் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில், சின்னச்சாமி மைதானத்தில் பராமரிப்பு வேலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து பசுமை தீர்ப்பாயம் ஐபிஎல் போட்டிகளின் போது சின்னசாமி மைதானம் பயன்படுத்திய தண்ணீர் உபயோகம் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறும், மேலும் குடிநீர் பயன்படுத்தப்பட்டதா? எனவும் கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு கேள்வி எழுப்பிள்ளது.
பெங்களூரு நீர் வளங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்படும் நீரின் அளவு குறித்த விவரங்களை மே இரண்டாம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு என்ஜிடி கேட்டு கொண்டுள்ளது. 17வது ஐபிஎல் சீசனில் பெங்களூரு மைதானத்தில் இதுவரை மூன்று போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க:5வது ஓவர் 20 ரன்.. எங்க தோல்வி அங்கதான் ஆரம்பிச்சது.. தோல்விக்கு பின்னர் டூப்ளசிஸ் பேட்டி
மேலும் ஏப்ரல் 15, மே 4, மே 12, மே 18 ஆகிய தேதிகளில் சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. மேலும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் போட்டிகளின் போது குடிநீரை பயன்படுத்தவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும் குடிப்பதற்கு தவிர மற்ற வேலைகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக கிரிக்கெட் வாரியம் என்ஜிடியிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

