ஐதராபாத்தில் நடைபெற்ற 18வது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சொந்த மைதானமான உப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் கெய்க்வாட் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழக்க, அதற்குப் பின்னர் களம் இறங்கிய ரகானே 30 பந்துகளில் 35 ரன்கள் குவித்து வெளியேறினார்.
ஆல் ரவுண்டர் சிவம் டுபே மட்டுமே அதிரடியாக விளையாடி 24 பந்தில் இரண்டு போர் நான்கு சிக்சர்கள் என 45 ரன்கள் விளாசி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜடேஜா 23 பந்தில் 31 ரன்கள் குவிக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் குவித்தது. 166 எங்களுக்கு குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஹைதராபாத் அணி, இளம் வீர அபிஷேக் ஷர்மா வெறும் 12 பந்துகளில் மிக அதிரடியாக விளையாடி 37 ரன்களை குவித்தார்.
அதற்குப் பிறகு வந்த மார்க்ரம் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் குவித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி பத்தொன்பதாவது ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கினை அடைந்தது. நான்கு போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்கிறது. அதே நேரத்தில் நான்காவது போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது தோல்வியை பதிவு செய்துள்ளது.
சென்னை அணி விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் சென்னை மைதானத்தில் விளையாடி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெளிமாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. எனவே தோல்வி குறித்து சென்னையின் கேப்டன் ருத்ராஜ் கூறும் பொழுது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆடுகளம் மெதுவாக இருந்தது.
அவர்கள் பந்துவீச்சு பின் பகுதியில் அதாவது இரண்டாவது பகுதியில் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆட்டத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்து சூழ்நிலையை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. போட்டியின் ஆரம்பத்தில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் ஆட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டனர். கருப்பு மண் ஆடுகளம் என்பதால் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் மெதுவிலும் மெதுவாக இருந்தது. மேலும் அவர்கள் அதிக தூரம் கொண்ட பவுண்டரி லைன்லயே எங்களை விளையாட வைத்தார்கள்.
இதையும் படிங்க:முதல் 6 ஓவரிலேயே சிஎஸ்கே சோலியை முடித்த சன்ரைசர்ஸ்.. சிஎஸ்கே பரிதாப தோல்வி.. காரணம் என்ன?
நாங்கள் பவர் பிளேவில் டிராவிஸ் ஹெட்டுக்கு ஒரு கேட்ச் வாய்ப்பை வீணடித்து மிகப்பெரிய விலையை கொடுத்தோம். ஆனாலும் அவர்களை 19ஆவது ஓவர் வரை அழைத்துச் சென்றோம். 170 முதல் 175 ரன்கள் வரை குவித்து இருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும் என்று நினைத்தேன். போட்டியின் இரண்டாவது பாதியில் சிறிது பனி இருந்தது. ஆட்டத்தின் இறுதியில் மொயின் அலி பந்து வீசியது படிப்பொழிவில் எந்த தாக்கம் ஏற்படவில்லை என்று காட்டியது” எனக் கூறியிருக்கிறார்.

