அடிமேல் அடி வாங்கிய சிஎஸ்கே.. பதிராணா முஸ்தஃபிகுர் ரகுமான் ஆடாத காரணம் என்ன.?.. ரசிகர்கள் கவலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று ஹைதராபாத் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் சென்னை அணிக்கு பத்திரானா மற்றும் முஸ்தபிகுர் ரஹ்மான் ஆகியோர் விளையாடாதது இன்று சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சொந்த மைதானமான ஹைதராபாத் உப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டாஸ் வென்று பந்து வீசுவதற்கு இந்த ஆடுகளம் முதலில் நன்றாக தெரிகிறது. எனவே பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என்று கம்மின்ஸ் கூறிய நிலையில், சென்னை அணியின் இன்னிங்சை கேப்டன் ருத்ராஜ் மற்றும் ரட்ச்சின் ரவீந்திரா ஆகியோ தொடங்கினர்.

- Advertisement -

ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் வெளியேறிய நிலையில் கேப்டன் ருத்ராஜ் 21 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஆடுகளம் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் சென்னை அணி மெதுவான தொடக்கத்திலேயே விளையாடியது. அதன் பின்னர் வந்த அனுபவ வீரர் ரகானே 30 பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்கள் குவித்து வெளியேற,ரன் ரேட்டை உயர்த்த அதன் பிறகு ஆல்ரவுண்டர் சிவம் டுபே களம் இறங்கினார்.

- Advertisement -

இவரது அதிரடியான ஆட்டம் சோர்ந்து போயிருந்த சென்னை ரசிகர்களுக்கு சிறிது ஆறுதல் அளித்தது. 24 பந்துகளை மேற்கொண்டவர் இரண்டு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 45 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்ன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு சென்னை அணியின் ரன் வேகம் குறைந்தது.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. 277 ரன்கள் குவித்த இதே ஆடுகளத்தில் சென்னை அணி குறைவான ரன்களையே ஹைதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயித்திருக்கிறது. ஆனால் எதிரணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தக்கூடிய சென்னை அணியின் முக்கிய இரண்டு நட்சத்திரவேகப்பந்து வீச்சாளர்களன முஸ்தஃபிகர் ரகுமான் மற்றும் பத்திரானா ஆகியோரிடம் பெறவில்லை.

- Advertisement -

இதற்கான காரணத்தை டாசின்போது தெரிவித்த ருத்திராஜ், முஸ்தபிர் ரஹ்மான் ஜூன் மாதம் நடைபெற இருக்கிற உலகக் கோப்பை டி20 தொடருக்கு விசாவை புதுப்பிப்பதற்காக, வங்காளதேசம் சென்றிருப்பதாகவும் மேலும் பத்திரானா காலில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க:கேப்டன் பொறுப்பு வந்ததும்.. பேட்டிங்கில் கோட்டை விடுகிறாரா ருத்துராஜ்? பயிற்சியாளர் கூறும் பதில்

இந்த முக்கிய இரண்டு வேகம் பந்துவீச்சாளர்கள் இடம்பெறாத நிலையில், அது சென்னை அணிக்கு நிச்சயம் சாதகமாக அமைய வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இவர்களுக்கு பதிலாக மொயின் அலி, தீக்சானா மற்றும் முகேஷ் சௌத்ரி களமிறங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles