கோலியை மீண்டும் கேப்டனா ஆக்குங்க.. சிஎஸ்கே வீரர் எங்களுக்கு வேணாம்.. சர்ச்சையை கிளப்பிய ஆர்சிபி ரசிகர்கள்.. காரணம் என்ன.?

17வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் தற்போது வெற்றிகரமாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், வலுவான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் எதிர்கொண்ட நான்கு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

சீசன் தொடங்குவதற்கு முன்பாக வலுவான அணி என்று கணிக்கப்பட்ட பெங்களூர் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது. ஐபிஎல் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ், கிரிஸ் கெயில் என்று நட்சத்திர ஜாம்பவான்களும் ஜாக்காலிஸ், டேனியல் விக்டோரி, மற்றும் ராகுல் டிராவிட் போன்ற திறமையான வீரர்களும் விளையாடிவிட்டனர்.

- Advertisement -

தற்போது இருக்கக்கூடிய அணியிலும் விராட் கோலி, மேக்ஸ்வெல் பாப் டு பிளஸ்சி என்று திறமையான அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும் தற்போதும் அந்த அணி தோல்வி பாதையை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில சீசன்களில் பந்துவீச்சு வலுவில்லாமல் காணப்பட்டாலும் பேட்டிங்கில் எப்போதுமே பெங்களூர் அணி சிறந்து விளங்கும்.

- Advertisement -

ஆனால் தற்போது நடக்கின்ற சீசனில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே பெங்களூர் அணி தொடர்ந்து சொதப்பி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை தவிர பாப் டூப்ளசிஸ், மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் பேட்டிங்கில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படி பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை.

மேலும் கேப்டன்சியிலும் பாப் டு பிளஸ்சிஸ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஒரு கேப்டனாக பேட்டிங்கில் கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் செல்லாமல் விரைவிலேயே ஆட்டம் இழப்பது பெங்களூர் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெங்களூர் அணியின் சில ரசிகர்கள் தற்போது விராட் கோலி திரும்பவும் பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏஜென்ட் ஆன பாப் டு ப்ளஸ்சிஸ் ஆட்டத்தை ஆட்டம் காண செய்ய வேண்டும்.

- Advertisement -

இல்லையெனில் எங்களுக்கும் பெங்களூர் அணிக்குமான உறவு முடிந்து விட்டது என்று கூறி தற்போது சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் கேப்டன் டூ பிளஸ்சிஸ் கேப்டன்சி ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் சில ஆர்சிபி ரசிகர்கள் கேப்டனால் மட்டுமே ஒன்றும் செய்ய இயலாது ஒரு அணி என்பது 11 பேர் கொண்ட குழு விளையாட்டு. எனவே அனைவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைக்க முடியும். தனி ஒரு மனிதரால் வெற்றி பெற வைக்க முடியாது என்றும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அவர் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள்.. அந்த பையன ஜாலியா இருக்க விடுங்க.. பிரட்லீ ஓபன் டாக்

மேலும் சமீபத்தில் பெண்கள் ஆர் சி பி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியதால் ஆடவர் அணியும் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பெங்களூரு அணியின் சொதப்பலான ஆட்டம் ரசிகர்களிடையே கோபத்தை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது. எனவே இந்த பிரச்சனைகளை கலைந்து ஆர்சிபி அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இந்த முறை கோப்பையை கைப்பற்றும? என்ற பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles