ஐபிஎல்லில் சென்னை அணியை போன்று ஐந்து முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்பொழுது ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்கி இருக்கிறது.
மும்பை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளும் எதிர்மறையான சூழ்நிலை நிலவி வரும் வேளையில், ரசிகர்களும் பாண்டியாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி கலந்து கொள்ளும் போட்டிகளில் ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் பாண்டியா சற்று சரிசமமற்ற மன நிலையில் இருப்பதாக தெரிகிறது.
மேலும் அணி வீரர்களுக்கு உள்ளேயும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரிகிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாண்டியாவை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை திரும்ப நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி பாண்டியாவுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் வலுக்கும் வேளையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி பாண்டியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அவரும் நம்மை போன்ற ஒரு மனிதர் தானே, அவரும் இரவில் நிம்மதியாக தூங்க தூங்க வேண்டாமா? என்று கூறி இருக்கிறார் இது குறித்த அவர் முழுமையாக கூறும் பொழுது
“மும்பை இந்தியன்ஸ் என்ற ஒரு அணிக்கு நீங்கள் பல ஆண்டுகளாக ஆதரவை கொடுத்து வந்தீர்கள்.
இரண்டு மூன்று போட்டிகளில் தோற்றதால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் மோசமான அணியாக மாறிவிடாது. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி எப்பொழுது வேண்டுமானாலும் வலுப்பெறும். தற்பொழுது அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா என்ற புதிய கேப்டன் கிடைத்திருக்கிறார். இது முழுக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவாக தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன். எனவே அனைவரும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
ஹர்திக் பாண்டியா எப்படி ஒரு தரமான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தன்னை வெளிப்படுத்த அவருக்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அவரும் சாதாரண ஒரு மனிதர் தான். அவரும் இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும். அதனால் எல்லோரும் அமைதியாக இருங்கள், பொறுமை காணுங்கள்”என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:பத்து அணியுமே ஸ்ட்ராங்கா இருக்கு.. ஆனா கோப்பையை இந்த அணிதான் வெல்லும்.. கணிக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர்
மேலும் ஹர்டிக் பாண்டியாவும் இதையெல்லாம் மறந்துவிட்டு ஆட்டத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடினால் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். எனவே ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் என்று கூறி இருக்கிறார்.

