பத்து அணியுமே ஸ்ட்ராங்கா இருக்கு.. ஆனா கோப்பையை இந்த அணிதான் வெல்லும்.. கணிக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர்

ஐபிஎல் 2024 லீக் தொடரை பொறுத்தவரை அனைத்து அணிகளும் கடும் சவால் அளிக்கக்கூடிய அணிகளாகவே விளங்குகின்றன. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றை மற்ற அணிகள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்காது. இந்த நிலையில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் கோப்பையை வெல்லப்போகும் தனது விருப்பமான அணி குறித்துக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

2024 ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மொத்தம் 15 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. இதில் அனைத்து அணிகளும் வெற்றிக் கணக்கை தொடங்கி புள்ளி பட்டியலில் மேல் ஏறி வரத் தொடங்கி இருக்கின்றனர். முதலில் ஆண்ட அணிகள் என்று கருதப்படும் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வழக்கம் போல வலுவாக காணப்படும்.

- Advertisement -

மற்ற அணிகளில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா இன்னும் ஏறக்குறைய சில அணிகளை தவிர மற்ற அணிகள் வலு குறைவாகவே பெரும்பாலும் இருக்கும். இதனால் இந்த அணிகள் அந்த அணிகளை தோற்கடித்து எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இதுதான் சமீப காலமாக நடந்து வந்தது. ஆனால் இந்த முறை 10 அணிகளும் வலுவாகவே காணப்படுகின்றன.

- Advertisement -

மூன்று வெற்றிகளை பெற்று முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, அதேபோல மூன்று தோல்விகளைப் பெற்று கடைசி இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் வலுவாகவே காணப்படுகிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை அணியில் நிலவக்கூடிய எதிர்மறையான சூழல். இதனால் மும்பை அணி எப்பொழுது வேண்டுமானாலும் கம்பேக் குடுக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும் அந்த அணியில் காயத்தால் விலகி இருக்கிற சூரியகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பினால் அந்த அணி மேலும் வலுவடையும். இதனால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது கணிக்க முடியாத நிலையில் இருப்பதால் இது குறித்து சிஎஸ்கே வீரருமான அல்பி மோர்கள் கருத்து தெரிவிக்கையில்
“மற்ற சீசன்களை விட இந்த சீசனில் அனைத்து அணிகளுமே மிக வலுவாகவும் அபாயமானதாகவும் உள்ளன. இதனால் இந்தத் தொடர் பல சவால்களை நிச்சயமாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் மூன்று தோல்விகளைப் பெற்று இருக்கிற மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக கம்பேக் கொடுப்பார்கள். அதேபோல இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார். சென்னை அணிக்காக விளையாடி உள்ள அல்பி மோர்கல் தனிநபராக பலமுறை ஆட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார்.

இவர் விளையாடிய 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒரு சீசன் விளையாடிய இவர் அதற்கு பிறகு ஐபிஎல்லில் இருந்தே ஓய்வு பெற்று விட்டார். இந்த முறை சென்னை அணி சேம்பியன் பட்டத்தை மீண்டும் வெல்லும் என்று கனத்திருக்கிறார். எனவே இவரது கணிப்பு பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles