வருகிற வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் போவதும் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்ராஜ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை அணி எதிர்கொண்ட முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி கம்பீரமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் டெல்லி அணியுடன் மூன்றாவது போட்டியில் மோதியது.
இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் 191 ரன்கள் நிர்ணயித்த டெல்லி அணியின் இலக்கை சென்னை அணி 171 ரன்கள் மட்டுமே குவித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் அன்று நடந்த ஒரே ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுவது மகேந்திர சிங் தோனி, பேட்டிங்கில் களமிறங்கி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அசத்தினார்.
இது சென்னை அணியைப் பொறுத்தவரை சாதகமாக பார்க்கப்படும் ஒரு விஷயமாகும். பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் சென்னை அணி பவுலிங்கில் முஸ்தபிகுர் ரகுமான் மதிசா பதிராணா, ஜடேஜா, துஷார்தேஷ்பாண்டே, தீபக்ஷஹார் என்று வலுவான அணி அணிவீரர்கள் சென்னை அணியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை அணியின் பந்துவீச்சாளரான முஸ்தபிகுர் ரகுமான் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் முஸ்தபிகுர் ரகுமான் வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ல் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருப்பதால், தனது அமெரிக்கா விசாவை பரிசீலிப்பதற்காக பங்களாதேஷுக்கு சென்றுள்ளார்.
மேலும் முஸ்தபிக்குர் ரகுமான் தனது பாஸ்போர்ட்டை ஞாயிறு அல்லது திங்கட்கிழமை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெற உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் களமிறங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் இயக்கத் தலைவர் கூறும் பொழுது
“முஸ்தபிக்குர் ரஹ்மான் வரவிருக்கிற டி20 உலக கோப்பைக்கான அமெரிக்க விசாவுக்காக ஐபிஎல்லில் இருந்து செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார். பின்னர் அமெரிக்க தூதரகத்தில் தனது கைரேகை வழங்கி விட்டு இந்தியாவிற்கு திரும்பவார்”என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க :வேகமா பந்துவீசுறது அவ்வளவு ஈஸி இல்ல.. இந்த ஒன்னு தான் என்னோட இலக்கு.. ஆட்ட நாயகன் மயங்க் யாதவ் பேட்டி
முஸ்தபிகுர் ரகுமான் இதுவரை சென்னை அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் தற்போது முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முஸ்தபிகுர் ஏப்ரல் இறுதி வரை மட்டுமே ஐபிஎல்லில் விளையாட முடியும். மேலும் மே மாதம் 3ஆம் தேதி முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கு பெற இருப்பதால் முஸ்தபிகுர் ரகுமான் தனது தேசிய அணியில் இணைவார்.

