சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இந்த நிலையில் தோனி குறித்து ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து மீண்டு வந்து 51 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன் பிறகு இலக்கை துரத்திய சென்னை அணியின் முன்னணி வீரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்ததால் சென்னை இனிய ரன்கள் குவிக்க தடுமாறியது. இதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ரகானே மற்றும் டாரி மிச்சல் ஆகியோர் அணியை ஓரளவு தூக்கி நிறுத்தினர். பின்னர் இறுதியில் அதிரடியாக விளையாடிய மகேந்திர சிங் தோனி நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் சென்னை அணி அந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இது ஒரு புறம் இருக்க 19வது ஓவரை எதிர்கொண்ட தோனி சிங்கிள் ஓட மறுத்து ஸ்ட்ரைக்கை அவரே வைத்திருந்தார். இருப்பினும் எதிர் முனையில் பிரைம் பேட்ஸ்மேன் ஆன ஜடேஜா நின்று கொண்டிருந்தார். தோனி தரமான வீரருக்கு ஏன் சிங்கிள் தர மறுக்கிறார் என்ற சந்தேகம் அப்போதே நிலவியது. இருப்பினும் ரசிகர்கள் அதனை பற்றி பெரிதாக கவலைப்படாமல் தோனியின் பேட்டிங்கை ரசித்துக் கொண்டிருந்தனர்.
கடைசி ஓவரில் கடைசி பந்தில் வெற்றிகரமாக சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து தோனி, பிறகு மைதானத்தில் உள்ள தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். புகைப்படம் எடுத்துவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு செல்லும் பொழுது அவரது காலில் ஐஸ் பேக் பொருத்தப்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து சென்னை அணி நிர்வாகம் போட்டி முடிந்து தோனி நடக்க முடியாமல் சிரமப்படும் வீடியோவை வெளியிட்டு இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சிஎஸ்கே தரப்பில் இந்த ஆட்டம் ரசிகர்களுக்காக கொடுக்கப்பட்ட பரிசு என்ற தோனி கூறியதாக இந்த வீடியோவினை வெளியிட்டு இருக்கிறது.
இதையும் படிங்க:9 வருட சோகம்.. பரிதாபமான பெங்களூர் அணி.. அடித்து நொறுக்கிய கொல்கத்தா.. சோகத்தில் ஆர்சிபி ரசிகர்கள்
இதனைக் கண்ட ரசிகர்கள் காயத்துடன் இந்த போட்டியில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி அடுத்த போட்டியில் களமிறங்குவாரா? என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்த நிலையில் அடுத்த போட்டிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் தோனி ஓய்வு பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Every moment meant cherish! Experience the immaculate vibe of Thala @ Vizag! 💛✨#DCvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/jLeBF5XFl6
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2024

