இன்று இரவு நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெறுவதால் முதல் வெற்றியைப் பெற மும்பை அணி போராடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இருப்பினும் மும்பை அணி இந்த இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு மிகவும் வலுவாக கருதப்பட்ட அணிகளில் ஒன்றும் மும்பை இந்தியன்ஸ். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக கருதப்பட்ட அணி நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் நீடிக்கிறது.
ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சியை பறித்தது, அணி வீரர்களுக்குள்ளேயே பிளவு, ஹர்திக் பாண்டியாவின் குழப்பலான கேப்டன்சி என்று மும்பை அணி தற்போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வி அடைந்த மும்பை அணி, இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் அணியிடம் சரணடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கரகோஷங்கள் மற்றும் கூச்சல்களை எழுப்புகின்றனர். இவற்றையெல்லாம் பாண்டியா கண்டுகொள்ளாதது போல் இருந்தாலும் ஒரு கேப்டனுக்கு அணி ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகம்தான் மேலும் ஒரு எனர்ஜியை கொடுக்கும். அது தற்போது இந்த இடத்தில் மிஸ் ஆகிறது.
மேலும் பவர் பிளேவில் பும்ராவிற்கு பந்து வீச கொடுக்காததே எதிரணியினர் அதிகமாக ரன்கள் குவிக்க மற்றும் ஒரு காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா ரோகித் சர்மா அதிரடியாக ரன்கள் குவிக்க வேண்டும் என்றும் பவர் பிளேவில் பும்ராவை பந்து வீச அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“ரோஹித் சர்மா தற்பொழுது நல்ல ஃபார்மில் இருக்கிறார். கடந்த போட்டியிலும் அதற்கு முந்தைய போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ராஜஸ்தான் அணியில் அவருக்கு எதிராக பர்கர் மற்றும் போல்ட் ஆகிய இருவரும் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ரன்கள் குவிக்க வேண்டும். எனவே ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தால் ஹர்திக் பாண்டியா மீதான அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க:டைவ் அடித்து கேட்ச் பிடித்த குட்டி மலிங்கா.. வெகுவாகப் பாராட்டிய தல தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
பாண்டியா தனது கேப்டன்சியில் கவனம் செலுத்தி புதிய பந்தினை பும்ராவிடம் கொடுத்து பந்து வீசச் செய்யுங்கள். ஏனெனில் முதல் ஆறு ஓவர்களில் சஞ்சு சாம்சன் எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகிய மூவரில் இருவரையாவது வெளியேற்ற வேண்டும். எனவே புதிய பந்தை பும்ராவிடம் கொடுப்பாரா?, பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் கடந்த போட்டிகளில் ரோகித் சர்மாவை தவிர அனைத்து பேட்டர்களும் 250 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார்கள். அப்போது அவர் மெதுவாக ஆடுகிறார் என்ற விமர்சனத்திற்கு உள்ளானார். சில நேரங்களில் அவர் சிக்கிக் கொள்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

