பேட்டிங்கில் சொதப்பும் ருத்துராஜ்.. கேப்டன்சி பிரஷர் தான் காரணமா.? பயிற்சியாளர் கூறும் தகவல்

நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள ருத்ராஜ் பேட்டிங்கில் சொதப்புவதற்கு கேப்டன்சி அழுத்தம் காரணமா? என்ற சந்தேகம் தற்போது நிலவுகிறது.

- Advertisement -

டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் பிரித்விஷா ஆகியோர் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் குவித்த நிலையில், டேவிட் வார்னர் 52 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 51 ரன்கள் குவித்ததன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு களம் இறங்கிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ், ரவீந்திரா ஆகியோர் களம் இறங்க ருத்ராஜ் ஒரு ரன்னிலும் ரவீந்திரா இரண்டு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதற்குப் பிறகு ரகானே மற்றும் டாரி மிச்சல் ஓரளவு சிறப்பாக விளையாட, இறுதிக்கட்டத்தில் 24 பந்துகளுக்கு 72 ரன்கள் தேவை என்ற நிலையில் மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார்.

- Advertisement -

முடிந்தவரை போராடிய அவர் 16 பந்துகளுக்கு 37 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெற்றிக்கு அருகில் வந்த சென்னை அணி இறுதியாக 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதில் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ஜெயிக்வாட் இந்த போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதற்கு முன்னர் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே குவித்து வெளியேறினார். அதன் பிறகு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளுக்கு 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சென்னை அணி வீரர்கள் அனைவரும் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த, ருத்ராஜ் மட்டும் நிதானமாக ஆரம்பித்து அதிரடியாக விளையாட வேண்டிய இடத்தில் அவுட் ஆகி விடுகிறார். இதனால் அவர் மீது கேப்டன்சி அழுத்தம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் கூறும் பொழுது

- Advertisement -

“ருத்ராஜ் கெக்ய்வாட் பேட்டிங் குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை. ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஒவ்வொரு முறையும் ருத்ராஜ் தனது பேட்டிங்கில் மிக தீவிரம் செலுத்தி வருகிறார். கேப்டன்சி மாறும் பொழுது ஒரு அணியை வழி நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அதனை ருத்ராஜ் சிறப்பாகவே செய்கிறார்.

இதையும் படிங்க :ஹர்திக் பாண்டியாவை காப்பாற்ற ரோகித்தால் மட்டுமே முடியும்.. வான்கடேவில் ரோஹித்திற்கு காத்திருக்கும் சவால்.. முழு விபரம்

வெற்றி தோல்வி என்பது சாதாரணமான ஒன்றுதான். ருத்ராஜ் எடுக்கும் முடிவுகளில் தோனி மற்றும் ஜடேஜாவின் பங்கு இருக்கும். தேவையான நேரத்தில் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள். சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோம். அதேபோல் வெளியில் வந்து விளையாடும் போது எந்த அளவிற்கு சவால்கள் இருக்கும் என்பது தெரியும். எங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை. அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles